Fuel Price Hike: போரால் ஒரே அக்கப்போர்; மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- சென்னையில் புதிய விலை என்ன?
Petrol Diesel Price Hike: ஷெல் பங்க்குகளில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 119.85 ரூபாயாகவும், டீசல் 123.52 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தனியார் பெட்ரோல் நிறுவனமான ஷெல் நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையை போர்ச் சூழல் காரணமாக உயர்த்தியுள்ளது. எரிபொருள் விநியோகப் பிரச்சினை காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு எவ்வளவு?
ஷெல் இந்தியா நிறுவனம், ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோலின் விலை 7 ரூபாய் 41 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஷெல் பங்க்குகளில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 119.85 ரூபாயாகவும், டீசல் 123.52 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பவர் பெட்ரோலின் விலை 129.85 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது முறையாக விலை ஏற்றம்
ஏற்கெனவே ஷெல் நிறுவனம் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக விலையை ஏற்றியுள்ளது.
வணிக சிலிண்டரின் விலையும் இன்று காலை உயர்த்தப்பட்டு, 2 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























