மேலும் அறிய

விடாமல் துரத்துதே... இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 2ஆவது நாளாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்ந்தது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் நேற்றுமுன்தினம்  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

கடந்த 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சென்னையில் பெட்ரோ டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.

விடாமல் துரத்துதே... இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசு அதிகரித்து ரூ.92.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசு அதிகரித்து ரூ.86.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் முடிவு தெரியும் வரை விலை ஏற்றப்படாமல் இருந்த நிலையில், திடீரென முடிவு வெளியான மறுநாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.

கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

விடாமல் துரத்துதே... இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
திமுக அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வழி செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அவர்கள் நம்புகின்றனர். ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைப்பார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இந்த விலை ஏற்றம் 5 மாநில தேர்தலுடன் ஒப்பிடப்படுவதால், அந்தந்த மாநிலங்களின் தலைவர்களும் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என வாகன ஓட்டிகள் நம்புகின்றனர். அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

இந்நிலையில் இன்று உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை, இன்றோடு நிறைவு பெற போவதில்லை. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு முன்பாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிற கோிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget