மேலும் அறிய

Petrol, Diesel : தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை : தவிக்கும் சாமானிய மக்கள்..!

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.44க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.80க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரூபாய் 100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், நேற்று முன்தினம் முதன்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 100ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 33 காசு அதிகரித்து ரூபாய் 100.13க்கு விற்கப்பட்டு வருகிறது. மாநிலத்திலே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக ரூபாய் 102க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று 93.72 காசுகள் விற்கப்பட்ட டீசல் இன்று 93.91க்கு விற்கப்படுகிறது. நேற்று ரூபாய் 100.13க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.44க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி (அதாவது 10 நாட்களுக்கு முன்பு) ரூபாய் 98.65க்கு சென்னையில் பெட்ரோல் விற்கப்பட்டது.


Petrol, Diesel : தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை : தவிக்கும் சாமானிய மக்கள்..!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


கலால் வரி என்பது மத்திய மாநில அரசுகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரி. கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை தற்போது மேலும் குறைந்து 40 டாலராக உள்ளது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பலவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.  


Petrol, Diesel : தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை : தவிக்கும் சாமானிய மக்கள்..!


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 


தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை ஆகிய நிலையில், நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலே அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 105க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget