மேலும் அறிய

Petrol-Diesel Price: ஏற்ற இறக்கமா? மாற்றமில்லையா? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!!

இன்றைய தினத்தின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்று, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 111-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

கச்சா எண்ணெய்:

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசியா நாடுகளில் (ஏமன்- சவுதி அரேபியா) தற்போது பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது.  மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

உதாரணமாக, கடந்த 2019-20ம் ஆண்டில் 32.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த அளவில் வெறும் 27% ஆகும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி  111 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.68,743.95 கோடி. 2020 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ. 92,773.42 கோடி ஆக இருந்தது.

Petrol-Diesel Price: ஏற்ற இறக்கமா? மாற்றமில்லையா? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!!
 
இறக்குமதி செலவு அதிகரித்தால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) மேலும் மோசமடையக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரியத் தொடங்கும். 

கச்சா எண்ணெயின் உயர்வால், நாட்டின் பணவீக்கம் (தயாரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக ) அதிகரிக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்கும். இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும். கடன் வாங்குவதை தொழில் நிறுவனங்கள் குறைத்தால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி குறையத் தொடங்கும். உற்பத்தி, சேவை  விவசாயம் என அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கக் கூடும்.  

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை சரியத் தொடங்கியதால், கடந்தாண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்தது. மீண்டும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் மீண்டும் கலால் வரி  உயர்த்தப்படலாம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget