மேலும் அறிய

Petrol, Diesel Price: தினந்தோறும் அதிகரிக்கும் அத்தியாவசிய விலை.. திடீரென மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை..?

Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 277வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 

கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.

அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 277வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி இன்று (பிப்ரவரி 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget