மேலும் அறிய

Petrol Diesel Price : பெட்ரோல் விலையில் வந்த மாற்றம் என்ன? அதிரடி விலை குறைப்பு எங்கே?

ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் (மதிப்புக் கூட்டு வரி) குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ 4, ரூபாய் 5  குறைப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.   

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு 14வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்றும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்றும் பெட்ரோல் ரூபாய் 101.40 லிட்டருக்கு விற்கப்படுகிறது. டீசல் விலையும் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்கப்படுகிறது.  இதற்கிடையே, ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் (மதிப்புக் கூட்டு வரி) குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ 4, ரூபாய் 5  குறைப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.   

முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.


Petrol Diesel Price : பெட்ரோல் விலையில் வந்த மாற்றம் என்ன? அதிரடி விலை குறைப்பு எங்கே?

 

சமீப மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, சமீப வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உள்நாட்டில் அதிகரித்து வருகின்றன. நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும்- உற்பத்தி, சேவை அல்லது விவசாயம்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.

பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய முடிவு ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி)  மாநிலங்கள் குறைக்க வேண்டும்" என்று தெரிவித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget