மேலும் அறிய

Petrol, Diesel Price: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!

Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 17 மாதங்களை கடந்துள்ள நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து  521வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 24 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 521வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 17 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Gold and silver rate today : திடீர் பல்டி.! 2,560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்
திடீர் பல்டி.! 2,560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்
Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Kerala Lottery Result Today (25-3-2026): லாட்டரி, பரிசு, பணம்.. இன்றைய தினம் யாருக்கு? தனலட்சுமி குலுக்கல் முடிவுகள் உடனுக்குடன்!
Kerala Lottery Result Today (25-3-2026): லாட்டரி, பரிசு, பணம்.. இன்றைய தினம் யாருக்கு? தனலட்சுமி குலுக்கல் முடிவுகள் உடனுக்குடன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget