பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக எல்ஐசியின் அசத்தல் திட்டம்!
இந்தியாவில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும் அனைத்துத் தரப்பட்ட மக்களை மனதில் வைத்து புதிய புதிய திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று தான் எல்ஐசியின் கன்யாதான் பாலிசி.
பெண்களின் திருமணம் மற்றும் உயர்கல்வியைக் கருத்தில் கொண்டு எல்ஐசி கன்யாதான் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு வரப்பிரதாசமாக உள்ளது.
பெண் குழந்தைகளைப்பிறந்தாலே பெற்றோர்களுக்கு பொறுப்புணர்வு தானாக வந்துவிடும். கல்வி, திருமணம் போன்றவற்றிற்காக அக்குழந்தையின் சிறு வயதில் இருந்தே சிறு சிறு சேமிக்கத்தொடங்கிவிடுவார்கள். இதற்காக தபால் நிலையங்கள், வங்கிகள் போன்றவற்றில் புதிய புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இருந்தப்போதும் மக்கள் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலே முதலில் அவர்களின் நினைவிற்கு வருவது எல்ஐசி மட்டும் தான். அதற்கேற்றால் போல் இந்தியாவில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும் அனைத்துத் தரப்பட்ட மக்களை மனதில் வைத்து புதிய புதிய திட்டங்களைக்கொண்டுள்ளது. அதில் ஒன்று தான் எல்ஐசியின் கன்யாதான் பாலிசி. நிச்சயம் இதன் சிறப்புகள் பெண்கள் குழந்தைகளைப்பெற்றுள்ள அனைவருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். அப்படி என்ன இந்த பாலிசியில் உள்ளது? குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் பயனளிக்கும் என அறிந்துக்கொள்வோம்.
முதலில் இந்த பாலிசியைப்பெற வேண்டும் என்று நினைத்தால் பாலிசிதார்களுக்கு 30 வயதும், அவர்களது குழந்தைகளுக்கு ஒரு வயதும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த பாலிசி அவர்களுக்கு எதிர்காலத்தில் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவியாக இருக்கும்.
கன்யாதான் பாலிசியின் மெசூரிட்டி 13 அல்லது 25 ஆண்டுகளாகும். கண்டிப்பாக முதல் 3 ஆண்டுகளுக்கு பிரிமீயம் தொகை செலுத்துவதை நிறுத்தக்கூடாது. அதேப்போல் 25 ஆண்டுகால பாலிசி என்றாலும் 22 ஆண்டுகள் பாலிசி பிரீமியம் தொகைக்கட்டினால் போதும் என்ற விதி உள்ளது.
மேலும் மாதம் ரூபாய் 121 என மாதம் ரூபாய் 3600 பிரீமியம் தொகைச்செலுத்திக்கொள்ளலாம். இதோடு வாடிக்கையாளர்களின் வசதிக்காக நீங்கள் உங்கள் விருப்பத்தின் பேரில் பிரீமியம் தொகை செலுத்தும் ஆப்சன் இதில் உள்ளது. ஆனால் மற்ற பாலிசிகளில் இந்த நடைமுறை இல்லை.
எல்ஐசியின் கன்யாதான் பாலிசியைப் பெறுவதற்கான எளியமுறைகள்:
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தைப்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கான விண்ணப்பத்தை முதலில் பூர்த்திச் செய்து எல்ஐசி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது எல்ஐசி முகவர்கள் மூலம் இத்திட்டத்தில் இணையலாம். முன்னதாக இந்த பாலிசியை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆதார் அடையாள அட்டை, வருமான வரிச்சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டா மற்றும் முதல் மாத பிரீமியம் தொகைச் செலுத்துவதற்கு கையொழுத்திட்ட காசோலை அல்லது பணத்தினை கையில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பாலிசிதார் விபத்தில் உயிரிழந்திருந்தால் இழப்பீடாக ரூபாய் 10 லட்சமும், இயற்கை மரணம் நேர்ந்தால் ரூபாய் 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். இதோடு மட்டுமின்றி பாலிசியின் மெசுரிட்டி காலம் வரை குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.27 லட்சம் பாலிசிதாரரின் நாமினிக்கு வழங்கப்படும். எனவே இப்போதே பெண்கள் குழந்தை வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்து பயன்பெற்றுக்கொள்ள தயாராகுங்கள்.