Special FD: பொதுத்துறை வங்கியின் சிறப்புத் திட்டம் - '666 நாட்களில்' அற்புதமான வருமானம், விவரம் உள்ளே..!
Bank of India FD Scheme: மூத்த குடிமக்கள் 666 நாட்களில் அதிக வருமானம் ஈட்டுவதற்கான, பேங்க் ஆஃப் இந்தியாவின் திட்டம் கடந்த ஜுன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Bank of India FD Scheme: மூத்த குடிமக்கள் & சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் வழங்கக் கூடிய திட்டத்தை பேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா சிறப்பு FD திட்டம்:
பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆப் இந்தியா' தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, '666 நாட்கள் நிலையான வைப்புத் திட்டம்' (பாங்க் ஆஃப் இந்தியா 666 நாட்கள் நிலையான வைப்புத் திட்டம்) கடந்த ஜுன் 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, 666 நாட்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால், இதில் ஒருவர் ரூ.2 கோடிக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. திட்டத்தில், சீனியர் சிட்டிசன் & சூப்பர் சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களை விட அதிக வருவாய் உள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்கள் பொது குடிமக்கள் என்றும், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் என்றும், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சூப்பர் மூத்த குடிமக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான சுமார் 8% வட்டி:
பேங்க் ஆஃப் இந்தியாவானது, '666 நாட்கள் சிறப்பு FD திட்டத்தில்' சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.95 சதவிகித வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதே திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவிகித வட்டியும், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.30 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது.
FD மீது கடன் வசதி:
அருகில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்குச் சென்று, 666 நாட்கள் சிறப்பு FD திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கலாம். வங்கிக் கிளைக்குச் செல்ல முடியாதவர்கள் நெட் பேங்கிங் அல்லது பிஓஐ நியோ ஆப் மூலமாகவும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடன் வசதியும் (666 நாட்கள் FD திட்டத்தில் கடன் வசதி) வழங்கப்படுகிறது.
புதிய FD வட்டி விகிதங்கள் (BOI இன் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்):
பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 01, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் பொது மக்களுக்கு வங்கி 3 சதவ்கிதம் முதல் 7.3 சதவிகிதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பொது குடிமக்களுக்கு BOI வழங்கும் புதிய வட்டி விகிதங்கள்
7-45 நாட்கள் - 3 சதவிகிதம்
46-179 நாட்கள் - 4.50 சதவிகிதம்
180-269 நாட்கள் - 5.50 சதவிகிதம்
270 நாட்கள்- 01 வருடம் - 5.75 சதவிகிதம்
01-02 ஆண்டுகளுக்கு (666 நாட்கள் தவிர்த்து) - 6.80 சதவிகிதம்
02-03 ஆண்டுகளுக்கு - 6.75 சதவிகிதம்
05 ஆண்டுகள் - 6.50 சதவிகிதம்
05-10 ஆண்டுகள் - 6 சதவிகிதம்
மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்கள்
சில்லறை கால டெபாசிட்டுகளுக்கு (ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு) பொது குடிமக்கள் மீது 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும். மேலும் 0.25% வட்டியை 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பெறலாம். அதாவது, 03 முதல் 10 வருட காலப்பகுதியில், சாதாரண குடிமக்களை விட 0.75% அதிக வருமானம் ஈட்ட முடியும்.