SBI FD Interest Rates: எச்டிஎப்சி-யை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி… புதிய வட்டி விகிதங்கள் என்ன?
வட்டி விகிதங்கள் 10 பேஸிஸ் பாயிண்ட்ஸ் அல்லது 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்திருந்தது. இப்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எஸ்பிஐ வழங்கும் வட்டி விவரங்களை பார்க்கலாம்.
![SBI FD Interest Rates: எச்டிஎப்சி-யை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி… புதிய வட்டி விகிதங்கள் என்ன? FD Interest Rates After HDFC Bank, SBI Hikes Interest Rate On Fixed Deposit Check Revised FD Rates SBI FD Interest Rates: எச்டிஎப்சி-யை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி… புதிய வட்டி விகிதங்கள் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/185235dea93ba3df07ad9d00924725c5_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என அழைக்கப்படும் SBI வங்கியில் இருக்கும் FD எனப்படும் பிக்சட் டெபாசிட் மற்றும் RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய அக்கவுண்ட்ஸ்களுக்கு நல்ல வட்டி கிடைக்கிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த வகையான சேமிப்புக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் தவணை முறைகளில் பணம் செலுத்த வேண்டும். அதே சமயம் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகை கிடைக்கும். நேற்று எச்டிஎப்சி வங்கி அதன் பிக்சட் டெப்பாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில், ஸ்டேட் வங்கியும் உயர்த்தி உள்ளது.
இப்படி பணமழை கொட்டும் இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்பை தொடங்குவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வட்டி தொடங்கி பணத்திற்கான சேமிப்பு, வரிச்சலுகை என அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த 2 சேமிப்பு திட்டங்களுக்கும் எஸ்பிஐ வங்கி நல்ல வட்டியை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட எஸ்பிஐ வங்கி ரூ. 2 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகப்படுத்தி இருந்தது. வட்டி விகிதங்கள் 10 பேஸிஸ் பாயிண்ட்ஸ் அல்லது 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்திருந்தது. இப்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எஸ்பிஐ வழங்கும் வட்டி விவரங்களை பார்க்கலாம்.
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 2.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 3.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.40 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. .
- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான திட்டத்திற்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான திட்டத்திற்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான திட்டத்திற்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான திட்டத்திற்கு 5.30 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.80 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை திட்டத்திற்கு 5.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)