மேலும் அறிய

ஹூருன் நிறுவத்தின் உலகப் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 10 பேரில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி!

ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி.

ஹுருன் நிறுவனம் (Hurun Global Rich List 2022) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே தொழிலதிபராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani) இடம்பெற்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி சொத்துமதிப்பு கடந்த ஆண்டைவிட 24% உயர்ந்து சுமார் ரூ.7.7 லட்சம் கோடி (103 பில்லியன் டாலர்) மதிப்புடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பணக்காரர் பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான எல்.வி.எம்.எச்., சி.இ.ஓ., பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது  இடம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா சுமார் ரூ.1.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடம் பிடித்துள்ளார். மேலும் லட்சுமி மிட்டல், டிமார்ட் நிறுவனர் தமானி, ஹிந்துஜா குடும்பத்தினர், குமார் ஆகியோரும் முன்னணி இடத்தைப் பிட்டித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து 215 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  அதில் நைக்கா நிறுவனர் பால்குனி நாயர் உட்பட 58 பேர் புதிதாக இந்தாண்டு இடம்பெற்றுள்ளர். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில்,  இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, கோடீஸ்வரர்களின் நகரமாக விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக கோடீஸ்வரர்கள் வசிக்கும் இடமாக நாட்டின் தலைநகரான புதுடெல்லியும், பெங்களூரும் இருக்கின்றன.  கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பில்லியனர்கள் சுமார் 50 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளனர். இது யு.ஏ.இ.,யின் ஜி.டி.பி.,யில் இரு மடங்கு. சுவிட்சர்லாந்து ஜி.டி.பி.,க்கு இணையானதாகும்.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. அதன் காரணமாக உலக பொருளாதாரம் கடந்த சில மாத காலங்களாக அதலபாதாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலும், கொரோனாவின் வருகைக்கு பிறகு வெகு சிலரே பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கின்றனர். அதன்படி கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும், இந்தியாவில் இருந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

”கரகாட்டக்காரன் படம் மட்டுமல்ல அந்த வாழைப்பழ காமெடியும் காப்பிதான் “ - கங்கை அமரன் ஓபன் டாக் !

‘ஜாலி ஒ ஜிம்கானா’ ....பீஸ்ட் விஜய்யின் பிரமாதமான புதிய ஸ்டில்ஸ்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Embed widget