ஹூருன் நிறுவத்தின் உலகப் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 10 பேரில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி!
ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி.
ஹுருன் நிறுவனம் (Hurun Global Rich List 2022) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே தொழிலதிபராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani) இடம்பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி சொத்துமதிப்பு கடந்த ஆண்டைவிட 24% உயர்ந்து சுமார் ரூ.7.7 லட்சம் கோடி (103 பில்லியன் டாலர்) மதிப்புடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பணக்காரர் பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான எல்.வி.எம்.எச்., சி.இ.ஓ., பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா சுமார் ரூ.1.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடம் பிடித்துள்ளார். மேலும் லட்சுமி மிட்டல், டிமார்ட் நிறுவனர் தமானி, ஹிந்துஜா குடும்பத்தினர், குமார் ஆகியோரும் முன்னணி இடத்தைப் பிட்டித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 215 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் நைக்கா நிறுவனர் பால்குனி நாயர் உட்பட 58 பேர் புதிதாக இந்தாண்டு இடம்பெற்றுள்ளர். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, கோடீஸ்வரர்களின் நகரமாக விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக கோடீஸ்வரர்கள் வசிக்கும் இடமாக நாட்டின் தலைநகரான புதுடெல்லியும், பெங்களூரும் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பில்லியனர்கள் சுமார் 50 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளனர். இது யு.ஏ.இ.,யின் ஜி.டி.பி.,யில் இரு மடங்கு. சுவிட்சர்லாந்து ஜி.டி.பி.,க்கு இணையானதாகும்.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. அதன் காரணமாக உலக பொருளாதாரம் கடந்த சில மாத காலங்களாக அதலபாதாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலும், கொரோனாவின் வருகைக்கு பிறகு வெகு சிலரே பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கின்றனர். அதன்படி கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும், இந்தியாவில் இருந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
”கரகாட்டக்காரன் படம் மட்டுமல்ல அந்த வாழைப்பழ காமெடியும் காப்பிதான் “ - கங்கை அமரன் ஓபன் டாக் !
‘ஜாலி ஒ ஜிம்கானா’ ....பீஸ்ட் விஜய்யின் பிரமாதமான புதிய ஸ்டில்ஸ்..!