மினிமம் பேலன்ஸ் 50 ஆயிரம்.. ICICI வங்கிக்கு டாடா சொல்லப்போகும் வாடிக்கையாளர்கள்?
ஐசிஐசிஐ வங்கி தனது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவில் அரசு வங்கிகளுக்கு நிகராக சில தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான வங்கியாக ஐசிஐசிஐ வங்கி உள்ளது. ஐசிஐசிஐ வங்கிக்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் கிளைகள் உள்ளது. இந்த வங்கிக்கு பல லட்சக்ணக்கான கிளைகள் உள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை:
அரசு வங்கி போல இல்லாமல் தனியார் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி தனது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

50 ஆயிரம்:
மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ஆயிரமாக பெரு நகரங்களிலும், ரூபாய் 25 ஆயிரமாக சிறிய நகரங்களிலும், ரூபாய் 10 ஆயிரமாக கிராமப்புறங்களிலும் ஐசிஐசிஐ திட்டமிட்டுள்ளது. ஐசிஐசிஐயின் இந்த முடிவைத் திரும்ப பெற வேண்டும் என்று பயனாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறிய நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை முன்பு 5 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூபாய் 5 ஆயிரமாக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 10 ஆயிரமாக மாற்றியுள்ளனர்.
மூன்றாம் தரப்பினரில் இருந்து அதிகபட்சமாக ஒரு பணப்பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே செலுத்த முடியும்.
ஏனென்றால், இதற்கு முன்பு வரை ஐசிஐசிஐ வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூபாய் 10 ஆயிரமாக மட்டுமே இருந்தது. திடீரென குறைந்தபட்ச இருப்புத் தொகையை 5 மடங்கு ஐசிஐசிஐ உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றே வாடிககையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் பாதிப்பு?
சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமுே இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இல்லாவிட்டால் பற்றாக்குறை தொகையில் 6 சதவீதம் அல்லது ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 1 லட்சம் ரூபாய் வரம்பைத் தாண்டும்போது 1000 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூபாய் 3.50 முதல் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குறைந்தசபட்ச இருப்புத் தொகை என்பது ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தியிருப்பது கிராமப்புறங்களில் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
குறைக்குமா ஐசிஐசிஐ?
ஐசிஐசிஐ - வங்கியின் இந்த முடிவால் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பலரும் இந்த கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்றே கருதப்படுகிறது. இதனால், பலரும் ஐசிஐசிஐ சுமார் 5 மடங்கு அளவிற்கு உயர்த்தியுள்ள தனது குறைந்தபட்ச இருப்புத்தொகையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி போன்ற வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு நிகராக சம்பள கணக்குகள் ஏராளமாக உள்ளது. ஆனாலும், உடனடி கடன் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு போன்றவற்றிற்காக பலரும் இந்த தனியார் வங்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.





















