GST collection: ஜி.எஸ்.டி.,யை குதறிய கொரோனா; ஒன்றல்ல.. ரெண்டல்ல... ஒரு லட்சம் கோடிப்பே...!
கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தொகை ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில் கடந்த ஜூன் மாத வரி வசூல் ரூபாய் 92,849 கோடியாக குறைந்துள்ளது
கடந்த 8 மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான வசூல் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தொகை 92,849 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் கடந்த 8 மாதங்களில் மத்திய அரசுக்கு கிடைத்த சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான வசூல் தொகையானது ஒரு லட்சம் கோடி ருபாய் என்ற நிலையில் இருந்து வந்தது, கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருந்த பொதுமுடக்கமே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் தொகை குறைய காரணம் என கூறப்படுகிறது.
ஜூன் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் சிஜிஎஸ்டி 4,16, 424 கோடி ரூபாயாகவும் எஸ்ஜிஎஸ்டி தொகை 20, 397 கோடி ரூபாயாகவும், ஐஜிஎஸ்டி 49,079 கோடி ரூபாயாகவும் மற்றும் செஸ் வரி 96,949 கோடி ரூபாயாகவும் இருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 ஜூன் 5 முதல் ஜூலை 5 வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வரி செலுத்துவோருக்கு பல்வேறு நிவாரண நடவடிக்கைகள், தள்ளுபடி மற்றும் வட்டி குறைப்புகள் ஆகிய சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தன. கோவிட் இரண்டாவது அலையை அடுத்து, 5 கோடிக்கு குறைவாக மொத்த வருவாய் கொண்ட வரி செலுத்துவோருக்கு 15 நாட்கள் வரை தாமதாமாக வரி செலுத்த அனுமதிக்கப்பட்டது.
இந்த மாதத்தில் சிஜிஎஸ்டிக்கு 19,286 கோடியும் ஐஜிஎஸ்டியில் இருந்து எஸ்ஜிஎஸ்டிக்கு 9,16,939 கோடியையும் வழக்கமான தீர்வாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதே சமயத்தில் கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொகை ஆனது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் உடன் ஒப்பிடும் போது 2 சதவீகிதம் அதிகமாக உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரி என்பது கடந்த மே மாதத்தில் நடந்த வணிக பரிவர்த் தனைகள் உடன் தொடர்புடையது. கடந்த மே மாதத்திலும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், மே மாதத்தில் பதிவான இவே பில் தரவை ஏப்ரல் மாதத்தில் பதிவான இ-வே பில் தரவுகளான 5.88 கோடி இ-வே பில்களுடன் ஒப்பிடும் போது 3.99 கோடி இ-வே பில்கள் மட்டுமே மே மாதத்தில் பதிவாகி உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவான பில் பதிவுகளை விட 30 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்து வந்த நாட்களில் இ-வே பில்களின் என்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 20 முதல் இ-வே பில்கள் பதிவாகும் எண்ணிக்கையானது 20 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் தொகை குறைந்தாலும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்ப்பாக்கபடுகிறது.