GST Revenue: மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ 1.57 லட்சம் கோடி..- மத்திய அரசு தகவல்!
GST Revenue:சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மூலம் கடந்த மே மாதத்தில் ரூ,1.57 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![GST Revenue: மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ 1.57 லட்சம் கோடி..- மத்திய அரசு தகவல்! GST revenue collection for May up 12% YoY at Rs 1.57 lakh crore GST Revenue: மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ 1.57 லட்சம் கோடி..- மத்திய அரசு தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/01/bfb0b4fadfe01d78995dd1e46ccaeec61685625781499333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மூலம் கடந்த மே மாதத்தில் ரூ,1.57 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில், மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ,1.57 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வருவாய்
ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த முறை அதிகளவில் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடி ஆக இருந்தது. இந்த மாதத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த ஜி.எஸ்.டி. வசூலில் CGST- 28,411 கோடியும், SGST ரூ.35,828 கோடியும் IGST ரூ.81,363 கோடியும் (ரூ.41,772 கோடி இறக்குமதி சேர்த்து), செஸ் ரூ.11,489 கோடி (ரூ,1057 கோடி இறக்குமதியோடு) உள்ளடங்கும்.
மேலும் வாசிக்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)