மேலும் அறிய

Gold Silver Price Today: அதிர்ச்சி அளிக்கும் இன்றைய தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம்  கண்டு வந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.48 அதிகரித்து ரூ.4,650க்கும், சவரனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.37,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,009க்கும், சவரன் ரூ.40,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.77,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4602, சவரன் - ரூ.36,816

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4961, சவரன் - ரூ.39,688

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.20

ஒரு கிலோ வெள்ளி - ரூ.77,300 


Gold Silver Price Today: அதிர்ச்சி அளிக்கும் இன்றைய தங்கம் விலை!


தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!
Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget