மேலும் அறிய

Gold Silver Price Today: சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்... குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.4,612க்கும், சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36,896க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,971க்கும், சவரன் ரூ.39,768க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.76.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.76,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4625, சவரன் - ரூ.37,000

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4,984, சவரன் - ரூ.39,872

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.30

ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,300 


Gold Silver Price Today: சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்... குறைந்தது தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

காவல்கோட்டம் நாவலில் தண்ணீரில் நீந்தி வரும் நாய்களின் பெயர் தெரியுமா உங்களுக்கு ?

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

குழந்தைகள் அடையாளம் காண்பதில் திருப்தி இல்லை ; தமிழ்நாடு குறித்து ‛அமிகஸ்’ வேதனை

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Post Office Investment Schemes 2026: அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
Embed widget