மேலும் அறிய

Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலை 36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 குறைந்து ரூ.4,455க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874க்கும், சவரன் ரூ.38,992க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசு குறைந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4500, சவரன் - ரூ.36,000

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4859, சவரன் - ரூ.38,872

ஒரு கிராம் வெள்ளி - ரூ.74.40

ஒரு கிலோ வெள்ளி - ரூ.74,400 


Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

Airtel | என்னென்ன கொடுக்குறாங்க பாருங்க.. ஏர்டெல்-ன் புதிய ரூ.456 ப்ளான்!

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

வடகொரியாவில் உணவு பஞ்சம்: ஒரு கிலோ வாழைப்பழம் 3300 ரூபாய் !

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget