![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Gold Rate Today: சர்ர்ர்ர்ர்ர்ரென குறைந்த தங்கம் விலை..! இன்று வாங்கினால் செம லாபம்.. விலை நிலவரம் இதுதான்!!
Gold Rate Today Chennai Nov 23: சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூபாய் 632 குறைந்து சவரனுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 732க்கு விற்கப்படுகிறது.
![Gold Rate Today: சர்ர்ர்ர்ர்ர்ரென குறைந்த தங்கம் விலை..! இன்று வாங்கினால் செம லாபம்.. விலை நிலவரம் இதுதான்!! Gold Rate Today Chennai Nov 23, Gold Price fall more than Rs 600 Check out todays rate in tamilnadu Gold Rate Today: சர்ர்ர்ர்ர்ர்ரென குறைந்த தங்கம் விலை..! இன்று வாங்கினால் செம லாபம்.. விலை நிலவரம் இதுதான்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/68ba5f988c87c2be23e53a9e76d3e8ec_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 காரட் ரூபாய் 4 ஆயிரத்து 613க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 904க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 79 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 534 குறைந்தது. இதனால், சவரன் தங்கம் ரூபாய் 632 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்து 272க்கு விற்கப்படுகிறது. தங்கம் ஒரே நாளில் ரூபாய் 632 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல. 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 898க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 184க்கு விற்கப்படுகிறது. ஒருகிராம் வெள்ளி ரூபாய் 1.40 குறைந்து ரூபாய் 69.50க்கு விற்கப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி ரூபாய் 69 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
![Gold, Silver Price : ஒரு ஹேப்பி நியூஸ் மக்களே.. சென்னையில் இன்று இவ்வளவு குறைந்தது தங்கம் விலை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/e9e975197d3a0f6a0b039ed354020cc2_original.jpg)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)