Gold Price Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இரண்டே நாட்களில் 1360 ரூபாய் சரிவு...! உடனே கிளம்புங்க..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் 42,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பட்ஜெட் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து நேற்று முன் தினம்(பிப்.02) புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் ரூ.720 குறைந்து ஆபரண தங்கம் ரூபாய் 43 ஆயிரத்து 320 ஆக விற்பனையான நிலையில், இன்று (பிப்.04) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் 42680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,360 குறைந்துள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று (பிப்.04) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680ஆக விற்பனையாகி வருகிறது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 45,576 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,697 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் 80 காசுகள் குறைந்து ரூ.74.20 ஆக விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் 80 காசுகள் குறைந்து ரூ.74.20 ஆக விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்பனையாகிறது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்.01ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் கண்டது. அதன்படி ஒரே நாளில் கிராமுக்கு மொத்தம் 77 ரூபாய் உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக தங்கம் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் குறைந்துள்ளது.
தங்க ஆபரணங்கள்:
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
தங்க சேமிப்பு திட்டங்கள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம்.
- தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
- தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன.