மேலும் அறிய

Gold Rate | சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரியுமா?

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையில் மாற்றமின்றி சென்னையில் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 485-க்கும், சவரனுக்கு ரூபாய் 35 ஆயிரத்து 880-க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 485க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 880க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 844க்கும், சவரன் ரூ.38 ஆயிரத்து 752க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 844க்கும், சவரன் ரூபாய் 38 ஆயிரத்து 752க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வு ஏன்?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ABP நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


Gold Rate | சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரியுமா?

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.


Gold Rate | சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரியுமா?

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார். திங்கள் முதல் நகைக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சி’ 10 கோடி ரூபாய் தரும் நிறுவனம்..
Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..
ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..
ஃபெடரல் வங்கி: கோயம்புத்தூரில் செல்வந்தர்களுக்கான செல்வ மேலாண்மை உத்திகள்!
ஃபெடரல் வங்கி: கோயம்புத்தூரில் செல்வந்தர்களுக்கான செல்வ மேலாண்மை உத்திகள்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget