மேலும் அறிய

Gold rate | சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்தது தங்கம் விலை..!

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 136 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 920க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராமிற்கு  ரூபாய்  4 ஆயிரத்து 473க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூபாய் 35 ஆயிரத்து 784க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூபாய் 17 அதிகரித்து 4 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 136 அதிகரித்து 35 ஆயிரத்து 920-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 8 அதிகரித்து 4 ஆயிரத்து 840க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூபாய் 64 அதிகரித்து 38 ஆயிரத்து 720க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் குறைந்து ரூ.74.90க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது. 


Gold rate | சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்தது தங்கம் விலை..!

தங்கம் விலை உயர்வு ஏன்?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ABP நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.


Gold rate | சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்தது தங்கம் விலை..!

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார். தமிழக அரசின் புதிய தளர்வுகள் படி, தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (09.09.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில தனலட்சுமியை அள்ளிப்போறது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (09.09.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில தனலட்சுமியை அள்ளிப்போறது யாரு?
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
ITR Refund Status: வருமான வரி ரீஃபண்ட் ஏன் தாமதமாகிறது? இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்!
ITR Refund Status: வருமான வரி ரீஃபண்ட் ஏன் தாமதமாகிறது? இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்!
LIVE | Kerala Lottery Result Today (08.09.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (08.09.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
"வேடிக்கை பாத்தவருக்கு தாமரைப்பட்டயமா.." இந்தியன் பட காட்சியால் மு.க.ஸ்டாலினை சீண்டும் தவெக!
Karthigai Deepam:
Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?
Embed widget