மேலும் அறிய

தங்கம் விலை: ஒரு நாள் குறையும்... ஒரு நாள் கூடும்... ஒவ்வொரு நாளும் உயரும்!

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 264க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 கேரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 523க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 10 உயர்ந்து ரூபாய் 4 ஆயிரத்து 533க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் நேற்று சவரன் தங்கம் ரூபாய் ரூபாய் 36 ஆயிரத்து 184க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 264க்கு விற்கப்பட்டது.

அதேபோல, 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 897க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 176க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 72.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 72 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.


தங்கம் விலை: ஒரு நாள் குறையும்... ஒரு நாள் கூடும்... ஒவ்வொரு நாளும் உயரும்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.


தங்கம் விலை: ஒரு நாள் குறையும்... ஒரு நாள் கூடும்... ஒவ்வொரு நாளும் உயரும்!

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்" என்றார்.

தலைப்பு செய்திகள்

Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Gold and silver rate today : அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget