மேலும் அறிய

ரூ.2000 மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. பெட்ரோல் டீலர்கள் எதிர்ப்பு.. விற்பனை நிறுத்தமா?

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பெட்ரோல் பங்க் டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 15 முதல் ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ கட்டணங்களை ஏற்க மாட்டோம் எனவும் சில டீலர்கள் அறிவித்துள்ளனர்

ரூ.2000க்கும் மேற்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் வணிக கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு விலக்கு வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். தனி நபர் மட்டுமல்லாது வணிகர்களும், சிறு வியாபாரிகளும் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் நிலைக்குச் சென்றனர். இப்படியான நிலையில் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு இதுவரை MDR  எனப்படும் சேவைக் கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது இதில் மத்திய அரசு அதிரடி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி,2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் ரூ.2,000க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் இருந்து 0.4% MDR வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளரிடம் பெறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் உதாரணமாக ரூ5,000 செலுத்தினால் அதற்கான சேவை கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. 

பெட்ரோல் பங்க் டீலர்கள் கடும் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பெட்ரோல் பங்க் டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 15 முதல் ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ கட்டணங்களை ஏற்க மாட்டோம் எனவும் சில டீலர்கள் அறிவித்துள்ளனர். எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் யுபிஐ சேவை கட்டணத்தை நிறுத்தி விடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் மாற்றமில்லாத எரிபொருள் விலை ஆகியவற்றால் இந்த கூடுதல் சேவை கட்டணத்தை தங்களால் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணப்பரிவத்தனைக்கு ரொக்கமாக பெறலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருவேளை பெட்ரோல் பங்க் இந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் யுபிஐ பயன்படுத்துவது குறையும் எனவும் கணிக்கப்படுள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நம்பியே பெட்ரோல் நிலையத்திற்கு படையெடுக்கின்றனர். அப்படியிருக்கும் நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் வணிகத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என பலரும் தெரிவித்துள்ளனர். 

ஒருவேளை இந்த சேவை கட்டணம் மக்களிடத்தில் திணிக்கப்பட்டால் வேறு விதமாக பிரச்னை உருவாகலாம் என்பதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
Embed widget