(Source: ECI/ABP News/ABP Majha)
Flipkart: அடடா தள்ளுபடி! அதிரடி ஆஃபர்களுடன் சீசன் விற்பனையை தொடங்கிய ஃப்ளிப் கார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃபிளிப் கார்ட் தனது சீசன் விற்பனையான End Of Season Sale (EOSS) எனப்படும் மெகா விற்பனையை தொடங்கவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃபிளிப் கார்ட் தனது சீசன் விற்பனையான End Of Season Sale (EOSS) எனப்படும் மெகா விற்பனையை நாளை தொடங்கவுள்ளது.
இந்த மெகா விற்பனை எதிர் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடபெறவுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த மெகா விற்பனையில் பல லட்சக்கணக்கான விற்பனையாளர்களும் கோடிக்கணக்கான நுகர்வோர்களும் வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்ககப்படுகிறது. 24X7 என்ற முறையில் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களின் விருப்பப் பொருட்கள் அதிரடி ஆஃபர்களில் விற்பனைக்கு வரவுள்ளாதாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த விற்பனை காலத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்காதவர்களும் வாங்க வைத்து அவர்களை தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றுவதில் ஃப்ளிப் கார்ட் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு ஆஃபர்களை வழங்கும்.
The time left for moving items from wishlist to cart is directly proportional to the time left for the Flipkart EOSS 🥰
— Flipkart (@Flipkart) June 9, 2022
இந்த மெகா ஆன்லைன் விற்பனையின் சிறப்பு என்பதே, விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் அதிரடி ஆஃபர் தான். ஆஃபர் மட்டுமில்லாமல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்குவோர்களுக்கு பரிசுப் பொருட்களும் உடன் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் உலகின் மிகச்சிறந்த முன்னனி நிறுவனங்களின் பொருட்கள் அதிரடி ஆஃபரில் ஒரே இடத்தில் கிடைப்பது இன்னும் சிறப்பு.
இருக்கும் இடத்தில் இருந்த படியே ஒரு பொருளினை ஆர்டர் செய்யும்போது, ஒரு பொருளின் தன்மை மற்றும் அதன் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு வாங்குவது என்பது எளிதாக அமைந்து விடுகிறது. இந்த மெகா விற்பனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த விற்பனைகுறித்து இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இருப்பவர்களையும் பங்குபெறச் செய்ய ஃபிளிப் கார்ட் நிறுவனமானது 24X7 முறையில் ஃபேஷன் டிவியினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதில் விற்பனை குறித்த அனைத்து விதமன தகவல்களும் விற்பனை செய்யப்படவுள்ள அனைத்து பொருட்கள் குறித்தும் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாக ஃப்ளிப் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்