Fake Currency Notes: பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ள கள்ளநோட்டுப் புழக்கம்: அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!
அனைத்து நோட்டுகளிலும் கள்ள நோட்டு அதிகரித்துவிட்டதாகக் கூறும் ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள்தான் கட்டுக்கடங்காத அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது
![Fake Currency Notes: பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ள கள்ளநோட்டுப் புழக்கம்: அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி! Fake Currency Notes Spike in Fake 500 Rupee, 2000 RS Notes financial year 2021-22- RBI report Fake Currency Notes: பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ள கள்ளநோட்டுப் புழக்கம்: அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2018/01/10073813/1-Reserve-Bank-of-India-raises-daily-withdrawal-limit-from-ATMs-to-Rs-10000.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய ரிசர்வ் வங்கியின் முக்கியச் செயல்பாடுகளில் நாணயப் புழக்க மேலாண்மையும் ஒன்று. நாணய மேலாண்மை என்பது நாட்டில் இருக்கும் பணத்தின் புழக்கம் குறித்த தரவை வைத்திருப்பது. அது தேவையான பணத்தை புழக்கத்தில் விடுவதும் நீக்குவதும் அடங்கும். வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி 2021-22ம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அனைத்து நோட்டுகளிலும் கள்ள நோட்டு அதிகரித்துவிட்டதாகக் கூறும் ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள்தான் கட்டுக்கடங்காத அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 500 ரூபாய் நோட்டுகளில் 101.9 சதவிகித கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளில் 54.16 சதவிகிதம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து 214 கோடி ஆகி உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த கரண்சி நோட்டுகளில் அது 1.6 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி ரூபாய் 13,053 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூபாய் 12,437 கோடியாக இருந்தது.
மார்ச் 2020 இறுதியில், புழக்கத்தில் இருந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது, இது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கையில் 2.4 சதவிகிதமாகும். மார்ச் 2021 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 245 கோடி ஆகி உள்ளது. இது புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2 சதவிகிதம். கடந்த நிதியாண்டின் இறுதியில் இது 214 கோடியாகி உள்ளது.இது மொத்த நோட்டுகளின் புழக்கத்தில் 1.6 சதவிகிதம்.
மதிப்பின் அடிப்படையில், ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 22.6 சதவிகிதத்தில் இருந்து மார்ச் 2021 இறுதியில் 17.3 சதவிகிதமாகவும், மார்ச் 2022 இறுதியில் 13.8 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, புழக்கத்தில் உள்ள ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 3,867.90 கோடியிலிருந்து 4,554.68 கோடியாக உயர்ந்துள்ளது.
"தொகுதி அடிப்படையில், ரூ. 500 மதிப்பிலான நோட்டுகள் 34.9 சதவிகிதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து ரூபாய் 10 மதிப்புள்ள வங்கி நோட்டுகள், மார்ச் 31, 2022 வரை புழக்கத்தில் உள்ள மொத்த வங்கி நோட்டுகளில் 21.3 சதவிகிதமாக இருந்தன" என்று 2021க்கான ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
மார்ச் 2021 இறுதியில் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளின் பங்கு 31.1 சதவிகிதமாகவும், மார்ச் 2020 நிலவரப்படி 25.4 சதவிகிதமாகவும் இருந்தது. மதிப்பு அடிப்படையில், இந்த நோட்டுகள் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை 60.8 சதவிகிதத்திலிருந்து 73.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)