VerSe Innovation: Dailyhunt தாய் நிறுவனமான வெர்செ இன்னோவேஷன், 805 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி சாதனை..
இந்த ஆண்டு இதுவரை திரட்டப்பட்ட நிதிகளில், வெர்செ நிறுவனம் திரட்டிய 805 மில்லியன் டாலர்கள் முதல் இடத்திலும், ஸ்விக்கியின் 700 மில்லியன் டாலர் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது
![VerSe Innovation: Dailyhunt தாய் நிறுவனமான வெர்செ இன்னோவேஷன், 805 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி சாதனை.. Dailyhunt parent VerSe Innovation raises 805 million dollars at a valuvation of 5 billion dollars VerSe Innovation: Dailyhunt தாய் நிறுவனமான வெர்செ இன்னோவேஷன், 805 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி சாதனை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/34cb14e64961db8cacdb78c2965ba0ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல நிறுவனமான Dailyhunt-இன் தாய் நிறுவனமான வெர்செ இன்னோவேஷன், 805 மில்லியன் டாலர்கள் நிதி திராட்டி இந்த ஆண்டில் இதுவரை அதிக நிதி திரட்டி இருக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல அந்நிறுவனம் நிதி திரட்டுவது வழக்கம். மற்ற பெரு நிறுவனங்கள் இது போன்ற ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், Dailyhunt, Josh நிறுவனங்களின் தாய் நிறுவனமான வெர்ஸி இன்னொவேஷன், இந்த ஆண்டிற்கான நிதியை திரட்டி இருக்கிறது. அதில், 805 மில்லியன் டாலர்கள் நிதி கிடைத்திருக்கிறது.
Dailyhunt's parent raises $805 million led by CPPIB, valuation reaches $5 billion #news #dailyhunt https://t.co/9VnI5Gi7ZF
— Dailyhunt (@DailyhuntApp) April 6, 2022
இந்த ஆண்டு இதுவரை திரட்டப்பட்ட நிதிகளில், வெர்சி நிறுவனம் திரட்டிய 805 மில்லியன் டாலர்கள் முதல் இடத்திலும், ஸ்விக்கியின் 700 மில்லியன் டாலர் இரண்டாம் இடத்திலும், பாலிகான், பைஜூஸ், யூனிஃபோர் ஆகிய நிறுவனங்கள் தலா திரட்டிய 400 மில்லியன் டாலர் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கிறது.
திரட்டப்பட்டுள்ள நிதி மூலம், AI/ML (செயற்கை நுண்ணறிவு/மெஷீன் லேர்னிங்) ஆகிய திறன்களை வலுப்படுத்தவும், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் Web 3.0 போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்யவும் இப்பணத்தை பயன்படுத்தி கொள்ள இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
Dailyhunt தளத்தில் 350 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் Play Store-ல் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: TN Assembly Session LIVE: சட்டப்பேரவையில் கேள்வி நேரம்.. உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்.. விவரம் உடனுக்குடன்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)