மேலும் அறிய

சென்னையில் தங்கம் விலை அதிரடி மாற்றம்! ஒரே நாளில் சவரனுக்கு ₹2400 குறைவு! இன்றைய நிலவரம் இதோ!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.2400க்கு குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400க்கு குறைந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.1600க்கு குறைந்துள்ளது.

நேற்றைய அதிரடிக்குப்பின் இன்று இரண்டு முறை குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில், அதாவது அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது.  29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான 30-ம் தேதி காலையில், தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் 31-ம் தேதி காலையிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்று கிராமிற்கு 380 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் தற்போது ரூ.1600 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.2400 குறைந்து ஒரு சவரன் 1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைவு

இந்த நிலையில், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில், வெள்ளியின் விலை 30-ம் தேதி காலையிலும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது. ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 31-ம் தேதி காலையிலேயே கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலில், ஏப்ரல் 1-ம் தேதியான நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Embed widget