மேலும் அறிய
Advertisement
Tamilnadu Budget Analysis 2021-22 : கடந்த பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன? ஒரு பார்வை...!
மத்திய அரசின் கடந்தாண்டு பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டதா? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாட்டின் 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக, கடந்தாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நலத்திட்ட உதவிகள் என்னனென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.
- நாடு முழுவதும் ஏற்கனவே நடைபெற்று வரும் சாலைப்பணிகளுடன் 11 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், மதுரை – கொல்லம் இடையிலான சாலைப்பணிகள் உள்பட தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க ரூபாய் 1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், மும்பை – கன்னியாகுமரி வரையிலான புதிய வழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
- சென்னையில் 118 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுப்படுத்தப்படும். இதற்காக, ரூபாய் 63 ஆயிரத்து 246 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
- தமிழ்நாட்டில் பன்நோக்கு கடல்பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது
எதிர்பார்த்தது :
- தமிழ்நாட்டிற்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காவரேி – கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை,
- வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- 15வது நிதிக்குழு மத்திய அரசுக்கு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய வருவாய் பற்றாக்குறை சிறப்பு மானியம் 1,600 கோடி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
- 2020ம் ஆண்டு கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் நாட்டு மக்கள் பல்வேறு வரிச்சலுகைகளை எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்புகளும் பிரதானமாக இடம்பெறவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
தஞ்சாவூர்
தொழில்நுட்பம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion