மேலும் அறிய
Advertisement
TN budget 2023: சோழர்களின் பெருமையை பறைசாற்ற தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சிகயகம் - நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்!
சோழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2023-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில் வெளியான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கீழே காணலாம்.
- வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியை குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
- மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
- அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
- வயது முதிர்ந்த 590 தமிழ் அறிஞர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
- கடல் பல கடந்து, சமர் பல வென்று உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை பார்போற்றும் வகையில் பறைசாற்றிட தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- சென்னை சங்கமம் கலை விழா போன்று மேலும் எட்டு நகரங்களில் நடத்தப்படும்.
- தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புறக் கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
- இலங்கைத் தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
- தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு தொடர் முயற்சியால் மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- 711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் விரிவாக்கம் செய்யப்படும்.
- சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் தொடங்கப்படும்.
- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் தேர்ந்தெடுக்கப்பட்ட(மதிப்பீட்டு தேர்வு மூலம்) 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூபாய் 7 ஆயிரத்து 500 முதன்மை தேர்வுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை என ஆண்டுக்கு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆகிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
மேலும் படிக்க: TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் படிக்க:AIADMK Walkout: பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்ததும் அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு! காரணம் என்ன?
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion