TN Agri Budget 2022: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022 இன்று தாக்கல்... வெளியாகிறது புதிய அறிவிப்புகள்!
TN Farm Budget 2022: 2022 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழக பட்ஜெட் அறிவிப்பு 2022-23#TNAssembly | #TNBudget2022 |#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @ptrmadurai https://t.co/kyGEgf1AlI
— TN DIPR (@TNDIPRNEWS) March 18, 2022
இன்றைய பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை, மார்ச் 19ஆம் தேதி (இன்று) சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையாகும்.
வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாய அமைப்பினர், சங்கத்தினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறையை போலவே இந்த முறையும் விவசாய பட்ஜெட் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாடு 3வதாக மாநிலமாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமையை பெற்றுள்ளது.
அதனைதொடர்ந்து, பொதுபட்ஜெட் மீதான விவாதம் 21, 22, 23ஆம் தேதிகள் சட்டப்பேரவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி விவாதத்தின் மீதான ஸ்டாலின் பதிலுரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அறிவிக்கப்பட்டது என்னென்ன..?
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ. 2, 531 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
நகைக்கடன் தள்ளுபடி..
நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1000 கோடியும், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்காக ரூ. 600 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்