மேலும் அறிய

Budget 2026: 2026 பட்ஜெட்டின் நோக்கம் இதுதான்.. 3 முக்கிய விஷயங்களை சொன்ன நிர்மலா சீதாராமன்!

முதலாவதாக, உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவும்போது, அதன் மீள்தன்மையை மீட்டெடுக்கும் பொருட்டு நிலையான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9வது பட்ஜெட் இதுவாகும். முதல்முறையாக சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. அப்போது நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களில் மத்திய அரசின் பொருளாதார தொலைநோக்கு பார்வையை வடிவமைக்கும் மூன்று முக்கிய விஷயங்கள் பற்றி அவர் தெரிவித்துள்ளார். 

முதலாவதாக, உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவும்போது, அதன் மீள்தன்மையை மீட்டெடுக்கும் பொருட்டு நிலையான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.  சீரான அளவில் வளர்ச்சி பெறக்கூடிய வகையில் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

இரண்டாவதாக மக்களின் முழு விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட், வேலைகள், வருமான நிலைத்தன்மை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் போன்ற அன்றாட விஷயங்களில் உண்டாகும் கவலைகளை பூர்த்தி செய்வதையும், பல துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக உள்ளடக்கிய வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் பொருளாதார முன்னேற்றத்தை சமூக நலனுடன் சமநிலைப்படுத்தும் கொள்கைகளுடன் ஒரு துறையின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சென்றவடைவதில் அரசு உறுதியாக உள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

இந்த மூன்று விஷயங்களும் வளர்ச்சியை முதன்மை கருவியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. சீர்திருத்த எக்ஸ்பிரஸ் அதன் பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் அதன் வேகம் இருக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நிலைநிறுத்தவும் அரசு  7 மூலோபாயத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல், பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல், வெற்றி பெறும் MSMEகளை உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு உந்துதல் அளித்தல், நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நகர பொருளாதாரப் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget