மேலும் அறிய

Budget 2023: ஒரு ரூபாயில் மத்திய அரசின் பட்ஜெட்.. வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசம் என்ன? எளிதாக புரிந்து கொள்ளுங்கள்!

மத்திய அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட்டிற்கான வருமானம் மற்றும் செலவினத்தை, ஒரு ரூபாயை அடிப்படையாக கொண்டு இந்த தொகுப்பில் அறியலாம்.

2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதியாண்டிற்கான அரசின் மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய், அதனை செலவிடும் விகிதம் ஆகியவற்றை ஒரு ரூபாயை அடிப்படையாக கொண்டு தற்போது அறியலாம்.

அரசுக்கான வருமானம் என்ன:

மத்திய அரசுக்கு மொத்தமாக ஒரு ரூபாய் வருமானமாக கிடைக்கிறது என்றால், அதில் 35 பைசா கடன் மற்றும் அதுதொடர்பான வழிகளில் கிடைக்கிறது. ஜிஎஸ்டி வருவாய் மூலம் 16 பைசா, வருமான வரி மூலம் 15 பைசா, கார்ப்ரேட் வரி 15 பைசா, மத்திய கலால் வரி பைசா 7 பைசா, சுங்க வரி மூலம் 5 பைசா, வரி அல்லாத வருவாய் மூலம் 5 பைசாவும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. கடன் அல்லாத மூலதன வரவாக 2 பைசாவும் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான் மத்திய அரசுக்கான ஒவ்வொரு ரூபாய் வருவாயும் கிடைக்கப்பெறுகிறது.

அரசு செலவு செய்வது எப்படி?

அதேநேரம் பல்வேறு வழிகளில் கிடைக்கும் வருவாயை, அரசு வெவ்வேறு வளர்ச்சி பணிகளுக்காக செலவிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு செய்யும் பெரும் செலவாக ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் 20 பைசாவை, கடன்களுக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்காக செலவு செய்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்காக 17 பைசா வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 15 பைசாவும், நிதிக்குழுவிற்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 10 பைசாவும்,  மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசாவும் செலவு செய்யப்படுகிறது. இதர செலவுகளுக்காக 9 பைசாவும், பாதுகாப்பு மற்றும் மானியங்களுக்காக தலா 8 பைசாவும் ஒதுக்கப்படுகிறது. இறுதியாக ஓய்வூதிய திட்டங்களுக்காக 4 பைசாவும் மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் செலவு செய்யப்படுகிறது.

நிதிப்பற்றாக்குறை:

2022-23 நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவிகிதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது 2021-22 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% என்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டை விடக் குறைவு ஆகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் வரவு செலவுத் திட்டம் நடப்பு நிதியாண்டில் EBR அல்லது தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் கடன்களை நம்பியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் நிதி பெற்ற அமைச்சகங்கள்:

முந்தைய நிதியாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில், தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு 93 சதவிகிதம் கூடுதல் நிதியும், அதைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு 52 சதவிகிதம் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, ஜல் சக்தி அமைச்சகத்திற்கு கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் 25 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget