Adani Group Stocks: அதானி குழும பங்குகள் 13% வீழ்ச்சி - கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!
Adani Group Stocks: அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13% வீழ்ச்சியடைந்தது.
அதானி போர்ட்ஸ், அதானி என்ட்ர்பிரைசஸ், அதானி க்ரீன் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஏழாவது செசனாக சரிவை சந்தித்துள்ளது. அதானி குழும பங்குகள் 13% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் முதலே அதானி குழும பங்கு சரிவடைந்தது வந்தது.
நிஃப்டி 50-யில் அதானி குழுமஃ பங்குகள் 6% குறைந்தது. ஒரு வாரத்தில் 9% வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அதானி போர்ட் நிறுவனமும் 6% சரிந்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13% வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் 8%-மும் அதானி வில்மர் பங்கு 4%-மும் சரிவடைந்தன.அதானி குழுமத்தின் cumulative சந்தை முதலீட்டு மதிப்பு இதுவரை ரூ.90,000 கோடி வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்
சென்செக்ஸ் 906 புள்ளிகள் குறைந்து 72,761.89 ஆகவும், நிஃப்டி 353.95 புள்ளிகள் 21,981.75 ஆகவும் வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ.14 லட்சம் கோடியை இழந்துள்ளனர். முதலீட்டாளர்களின் சந்தை முதலீடு ரூ.371.69 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இது முந்தைய செசனில் ரூ.385.64 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பவர்கிர்ட், என்.டி.பி.சி. டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.223 பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவடைந்தன. பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளதால் முதலீட்டாளார்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, சிப்ளா, பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
பவர்கிரிட் கார்ப், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., யு.பி.எல்.,பி.பி.சி.எல்., டாடா மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி, ஹீரோ மோட்டர்கார்ப், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீன். பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், டிவிஸ் லேப்ஸ், எம் & எம், அப்பல்லோ மருத்துவமனை, இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜாஜ் ஆட்டோ, பாரத் ஸ்டேட் வங்கி, சன் ஃபார்மா, க்ரேசியம், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, டெக் மஹிந்திரா,ம் மாருதி சுசூகி, நெஸ்லே, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.