(Source: ECI/ABP News/ABP Majha)
A2B :IPO வெளியிடப்போகும் A2B உணவகம்: ரூ.10,000 கோடி வருவாயை அடைய திட்டம்..!
A2B Restaurant IPO: அடுத்த 5 ஆண்டுகளில் 10, 000 கோடி வருவாயை அடைய திட்டமிட்டுள்ளதாக A2B நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் பிரபலமாகி வரும் என A2B அழைக்கப்படும் அடையார் ஆனந்த பவன் நிறுவனம், IPO வெளியிட போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராம வணிகம் - உலக வணிகம்:
1960 ஆண்டு ராஜபாளையத்தில் குரு ஸ்வீட்ஸ் என்ற பெயரில், திருப்பதி ராஜா என்பவரால் கடை ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பெங்களூருவில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் ஆனந்த பவன் என்ற பெயரில் இனிப்புக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, மேலும் அடையாறு என்ற இடட்திலும் இக்கடை ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த இடத்தை வைத்தே, 2000 ஆம் ஆண்டில் அடையார் ஆனந்த பவன் என அழைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கிறது.,
இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடைகள் தொடங்கப்பட்டு வணிகம் விரிவாக்கப்பட்டது.
A2B IPO:
இந்த தருணத்தில், அடையார் ஆனந்த பவன் வணிகத்தை விரிவுப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் ஐ.பி.ஓ-க்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரீனிவாச ராஜா தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் வணிகம் குறித்து தெரிவிக்கையில், 1970 ஆம் ஆண்டுகளில் தினசரி விற்பனையானது ரூ. 1000 இருக்கும். ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி விற்பனையை அடையை முயற்சித்து வருகிறோம். அதையடுத்து ஐ.பி.ஓ வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் எப்பொழுது வெளியிட போவதாக அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கையில், அடையார் ஆனந்த பவன் நிறுவனம், மக்களுக்கு பரீட்சையமான நிறுவனம் என்பதால், ஐ.பி.ஓ நல்ல விலைக்கு போகும் என கருத்து தெரிவிக்கின்றனர்.
IPO என்றால் என்ன?
பங்குச்சந்தைகளில் ஒரு பெரிய நிறுவனம் அல்லது புதிய நிறுவனம் அல்லது ஒரு பழைய நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் நுழைய வேண்டும் என்றால் அது ஐபிஓ என்ற முறை மூலமாக நுழைய முடியும். அதாவது ஐபிஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முறை. இந்த முறையின் மூலமாக ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை முதல் முறையாக மக்களிடம் விற்பனை செய்ய முடியும். ஐபிஓ மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் மக்களிடம் விற்பனைக்கு வரும். அதற்கு முன்பு வரை அந்த நிறுவனத்தின் பங்குகள் நிறுவனத்தை தொடங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடம் இருக்கும்.