Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2026ம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகப்படுத்த உள்ள, மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming midsize SUVs 2026: இந்தியாவில் 2026ம் ஆண்டில் அறிமுகமாக உள்ள, மிட்-சைஸ் எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2026-க்கான மிட்-சைஸ் எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி என்பது மிகவும் போட்டித்தன்மை மிக்க பிரிவாக உள்ளது. ஹுண்டாய் க்ரேட்டா, மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நடப்பாண்டில் மாருதியின் விக்டோரிஸ் மற்றும் டாடா சியாரா ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டில் பல ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள், புதிய தலைமுறை மாடல்கள் மற்றும் காம்பேக் எடிஷன்கள் ஆகியவை சந்தைப்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்களின் விவரங்கள்:
1. அடுத்த தலைமுறை கியா செல்டோஸ்
கியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செல்டோஸ் கார் மாடலுக்கான விலையை தவிர, மற்ற அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளது. புதிய கே3 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் நீளம், அகலம் மற்றும் வீல்பேஸ் ஆகியவை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வசதிகளுடன் கியா செல்டோஸ் ஆனது உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, ஜனவரி 2ம் தேதி சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 13 லட்சம் முதல் 23 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 2027ம் ஆண்டில் இந்த காருக்கான ஹைப்ரிட் எடிஷன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2. மஹிந்த்ரா XUV 7XO
மஹிந்த்ராவின் புதிய XUV 7XO கார் மாடலானது அடிப்படையில் XUV 700 காரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எடிஷனாகும். ஜனவரி 5ம் தேதி அறிமுகப்படுத்த உள்ள இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் விலை விரைவில் அறிவிக்கப்படலாம். பெரிய அளவிலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 3 ஸ்க்ரீன் செட்-அப்பை பெறும் மஹிந்திராவின் முதல் இன்ஜின் அடிப்படையிலான காராக இது இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இன்ஜின் அடிப்படையில் மாற்றம் இருக்காது என்றும், 2.2 லிட்டர் டீசல் இன்ஜினில் ஆல்-வீல் ட்ரைவ் ஆப்ஷன் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ரூ.21 ஆயிரம் டோக்கன் தொகையுடன் இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
3. ரெனால்ட் டஸ்டர்
கடந்த 2022ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டரானது, வரும் ஜனவரி 26ம் தேதி மூன்றாவது தலைமுறை எடிஷன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது. உள்நாட்டு சந்தைக்கான காரானது, மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியை பெறும் என கூறப்படுகிறது. இன்ஜின் தொடர்பான தகவல்கள் இல்லாத நிலையில், டாப் வேரியண்ட்களில் 1.3 லிட்டர் ‘HR13’ டர்போ பெட்ரோல் இன்ஜின் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இதன் விலை, 11 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
4. நிசான் டெக்டான்
டஸ்டர் சந்தைப்படுத்தப்பட்டதும் அதன் போட்டியாளராக டெக்டானை களமிறக்க நிசான் நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் டீசரானது, டெக்டானின் பெரும்பாலான டிசைன் அம்சங்களானது, ஃப்ளாக்ஷிப் மாடலான பேட்ரோல் எஸ்யுவியின் தாக்கத்தை கொண்டுள்ளது. இன்ஜின் தொடர்பான பெரிய தகவல்கள் இல்லாவிட்டாலும், வழக்கமான நெனால்ட் மற்றும் நிசானின் கூட்டு அடிப்படையில், டெக்டானிலும் டஸ்டரில் இடம்பெறும் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரலாம். 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ள இந்த காரின் விலையானது, 11 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
5. ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்
கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள குஷக்கின் மேம்படுத்தப்பட்ட எடிஷன் அண்மைக்காலமாக சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் மற்றும் பின் என இரண்டு பக்கங்களிலும் மறுவடிவமைப்பை பெறும் என்று கூறப்படுகிறது. கூடுதல் அம்சங்கள் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்ஷனில் மாற்றம் இருக்காது என்றும், ஆனால் ஒரு லிட்டர் இன்ஜினில் உள்ள 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸிற்கு மாற்றாக 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் சேர்க்கப்படலாம். இதன் விலை 11 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
6. ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா குஷக்கின் சகோதரர் மாடலாக கருதப்படும் ஃபோக்ஸ்வாகன் டைகன் கார் மாடலும் மிட்-ஃலைப் அப்டேட்டை பெற உள்ளது. டைகனின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மேம்படுத்தல்களை பெறுவதோடு, ADAS, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற புதிய அம்சங்களும் வழங்கப்படலாம். இன்ஜின் அடிப்படையில் அப்படியே தொடர்வதோடு, கியர்பாக்ஸிலும் குஷக்கை போன்ற அப்டேட்டை பெற உள்ளதாம். 2026ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சந்தைப்படுத்தப்படும் இந்த காரின் விலை 11 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டாவின் எலிவேட் கார் மாடலும், நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு 2026ல் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இன்ஜின் அடிப்படையில் மாற்றமின்றி, தோற்ற அடிப்படையிலும், டோஷ்போர்டிலும் அப்டேட்டை பெற உள்ளது. கூடுதல் அம்சங்களும் வழங்கப்படலாம். அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தைப்படுத்த வாய்ப்புள்ள இந்த காரானது, ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டிருக்கலாம்.



















