மேலும் அறிய

Traffic Rules: ரோடுகளில் உள்ள கோடுகளுக்கு அர்த்தம் தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்குதா?

சாலைகளில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கோடுகளுக்கான அர்த்தங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் சாலைகளின் தரத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நன்றாக தரம் உயர்த்தியுள்ளனர். ஆனாலும், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துக்களை ஏற்படுவதற்கு சாலை விதிகளை பலரும் கடைபிடிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது. 

சாலைகளில் உள்ள கோடுகள்:

சாலை விதிகள் என்றால் சிக்னலில் உள்ள சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகள் மட்டுமே என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், சாலைகளில் உள்ள ஒவ்வொரு கோடுகளும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது. அதன் அர்த்தத்தை கீழே விரிவாக காணலாம். 

1. சாலையின் நடுவே உள்ள வெள்ளை கோடுகள்:

சாலையின் நடுவே இடைவெளி விட்டு அமைந்துள்ள வெள்ளைக் கோடுகள் வாகனங்கள் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனில் முந்திச் செல்லாம் என்பதை குறிக்கிறது. 

2. இடைவெளி இல்லாத நீண்ட வெள்ளைக் கோடுகள்:

சாலையின் நடுவே வெள்ளைக் கோடுகள் எந்த இடைவெளியும் இல்லாமல் இருந்தால் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லக்கூடாது என்று அர்த்தம். சாலையின் ஓரத்தில் வெள்ளைக் கோடுகள் நீண்டு இருந்தாலும் அதை கடந்து செல்லக்கூடாது என்று அர்த்தம்

3. உடைந்த மஞ்சள் கோடுகள்:

சாலையின் நடுவே மஞ்சள் நிறக் கோடுகள் இடைவெளி விட்டு இருந்தால் முன்னால் செல்லும் வாகனத்தை மிகவும் கவனமாக முந்திச் செல்ல வேண்டும் என்று அர்த்தம். மலைப்பகுதிகளில் இதுபோன்ற கோடுகள் காணப்படும்.

4. நேரான மஞ்சள் கோடுகள்:

சாலையின் நடுவே இடைவெளி இல்லாமல் நேரான மஞ்சள் கோடுகள் இருந்தால் முந்திச் செல்வது ( ஓவர்டேக்) செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். மலைப்பகுதிகளுக்கான சாலைகளில் இந்த கோடுகள் காணப்படும். 

5. இரட்டை மஞ்சள் கோடுகள்:

சாலையின் நடுவே இரட்டை மஞ்சள் கோடுகள் காணப்பட்டால் ஓவர்டேக் எனப்படும் முந்திச் செல்வது கண்டிப்பாக கூடாது என்று அர்த்தம். அது மிகவும் ஆபத்தானது என்பதை குறிக்கும். 

6. மிகப்பெரிய வெள்ளைக் கோடுகள்:

சிக்னலுக்கு முன்பு பெரிய அளவில் வெள்ளைக் கோடுகள் இருப்பது சிவப்பு நிற விளக்கின்போது அந்த இடம் வரைக்கும் மட்டுமே வாகனத்தை கொண்டு செல்ல அனுமதி என்று அர்த்தம். சில நேரங்களில் சாலைகளிலே ஸ்டாப் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். 

7. உடைந்த மற்றும் நேரான கோடுகள் ஒன்றாக இருப்பது:

சாலையின் நடுவே சில இடங்களில் நேராக இருக்கும் கோடுகளின் அருகே உடைந்த கோடுகள் காணப்படும். அதற்கு அர்த்தம் அதுபோன்ற உடைந்த கோடுகள் உங்கள் பக்கம் இருக்கும் இடங்களில் மட்டும் முந்திச் செல்ல வேண்டும் என்பது ஆகும்.

இந்த சாலை விதிகளை சரியாக புரிந்து கொண்டால் வாகனம் ஓட்டும்போது எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமலும், விபத்து இல்லாமலும் வாகனம் ஓட்டலாம். 

 

தலைப்பு செய்திகள்

Upcomomg 7 Seater: இனிமே எல்லாமே 7 சீட்டர் மயம் தான்..! மொத்தமா 9 ப்ராண்ட்கள், ஹைப்ரிட், EV, டர்போ..! முழு லிஸ்ட்
இனிமே எல்லாமே 7 சீட்டர் மயம் தான்..! மொத்தமா 9 ப்ராண்ட்கள், ஹைப்ரிட், EV, டர்போ..! முழு லிஸ்ட்
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
CNG Cars Discount: CNG கார் வாங்க பிளான் பண்றீங்களா.? அப்போ உடனே கிளம்புங்க.! செம ஆஃபர்; எந்தெந்த காருக்கு எவ்ளோ.?
CNG கார் வாங்க பிளான் பண்றீங்களா.? அப்போ உடனே கிளம்புங்க.! செம ஆஃபர்; எந்தெந்த காருக்கு எவ்ளோ.?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Embed widget