Top 6 Automatic Cars: இந்தியாவின் பெஸ்ட் ஆட்டோமெட்டிக் கார்கள்.. டாப் 6 இதுதான் - விலையும், தரமும் எப்படி?
Top 6 Automatic Cars: இந்தியாவின் சிறப்பான டாப் 6 ஆட்டோமெட்டிக் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப சமீபகாலமாக ஆட்டோமெட்டிக் கார் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் விலை மலிவான ஆட்டோமெட்டிக் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Tata Nexon:
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் டாடா. டாடாவின் நெக்ஸான் காருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேனுவல் மட்டுமின்றி ஆட்டோமெட்டிக் கியர் வசதியிலும் இந்த கார் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 8.78 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 14.05 லட்சம் வரை விற்கப்படுகிறது. 44 லிட்டர் பெட்ரோல் மற்றும் 60 லிட்டர் சிஎன்ஜி நிரப்பும் ஆற்றல் கொண்டது. 5 பேர் அமரும் வசதி கொண்டது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது.

2. Tata Punch:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Tata Punch ஆகும். இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகி வரும் இந்த கார் ஆட்டோமெட்டிக் வெர்சனிலும் அசத்தி வருகிறது. 20 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. இதன் ஆட்டோமெட்டிக் வெர்சன் தொடக்க விலை ரூபாய் 7.99 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 10.43 லட்சம் வரை விற்கப்படுகிறது. 1199 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. Maruti Swift:
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் மாருதி. மாருதியின் வெற்றிகரமான தயாரிப்பு Maruti Swift ஆகும். இந்த கார் ஆட்டோமெட்டிக் வெர்சனிலும் உள்ளது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 5 சீட்டர்களை கொண்ட இந்த கார் 25.75 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. ஆட்டோமெட்டிக் வெர்சனில் இதன் தொடக்க விலை ரூபாய் 8.03 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 9.98 லட்சம் வரை விற்கப்படுகிறது.

4. Maruti Baleno:
மாருதி நிறுவனத்தின் முக்கியமான படைப்பு Maruti Baleno ஆகும். புதியதாக கார் வாங்க விரும்புபவர்களின் தேர்வுகளில் இந்த கார் இருக்கும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்சனில் இயங்கும் இந்த கார் ஆட்டோமெட்டிக் வெர்சனிலும் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 8.21 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 10.20 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்ட இந்த கார் 22.94 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
5. Maruti Dzire:
மாருதி சுசுகி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமான தயாரிப்பு இந்த Maruti Swift Dzire. மேனுவல் மட்டுமின்றி ஆட்டோமெட்டிக் வெர்சனிலும் இந்த கார் இயங்குகிறது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையும் இது கொண்டுள்ளது. 25.71 கி.மீட்டர் வரை மைலேஜ் இந்த கார் தருகிறது. ஆட்டோமெட்டிக் வெர்சனில் இதன் தொடக்க விலை ரூபாய் 8.64 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 10.51 லட்சம் வரை விற்கப்படுகிறது.
6. Mahindra XUV 3XO:

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உலா வருவது மஹிந்திரா. எஸ்யூவி கார் தயாரிப்பில் நம்பர் 1 நிறுவனமாக உலா வருகிறது. இவர்களின் அசத்தலான படைப்பு Mahindra XUV 3XO ஆகும். ஆட்டோமெட்டிக் வெர்சனில் இதன் தொடக்க விலை ரூபாய் 8.19 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 16.64 லட்சம் வரை விற்கப்படுகிறது. 20.6 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 1498 சிசி திறன் கொண்டது இந்த கார் ஆகும்.





















