மேலும் அறிய

Tata Punch CNG: விற்பனைக்கு வந்தது டாடா பன்ச் சிஎன்ஜி மாடல் கார்.. விலை இவ்வளவுதானா? வாங்கிடலாம் போலையே..!

டாடா நிறுவனத்தின் பன்ச் சிஎன்ஜி மாடல் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் பன்ச் சிஎன்ஜி மாடல் காரின் விலை இந்திய சந்தையில் ரூ.7.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் CNG:

டாடா நிறுவனம் அண்மையில் தான் ஆல்ட்ரோஸ் CNG கார் மாடலை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, தனது பன்ச் CNG மாடலை காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அது தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் டாடா நிறுவனத்தின் நான்காவது சிஎன்ஜி கார் எனும் பெருமையை பன்ச் பெற்றுள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம், டியாகோ, டைகோர், மற்றும் ஆல்ட்ரோஸ் ஆகிய மாடல் கார்களையும், சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது புதியதாக பன்ச் இணைந்துள்ளது.

விலையும், வேரியண்ட்களும்:

இந்திய சந்தையில் டாடா பன்ச்சின் தொடக்க விலை ரூ.7.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.9.68 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூர், அட்வென்ச்சூர் மற்றும் அக்கம்ப்லிஸ்ட் என மூன்று வேர்யண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம்,  அட்வென்ச்சூர் மற்றும் அக்கம்ப்லிஸ்ட் வேரியண்ட்கள் நார்மல் பன்ச் வெர்ஷனிலும் கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பன்ச்சின் டாப் எண்ட் மாடலான கிரியேடிவ் சிஎன்ஜி வெர்ஷனில் வழங்கப்படவில்லை.


Tata Punch CNG: விற்பனைக்கு வந்தது டாடா பன்ச் சிஎன்ஜி மாடல் கார்.. விலை இவ்வளவுதானா? வாங்கிடலாம் போலையே..!

டாடா பன்ச் சிஎன்ஜி விலை விவரங்கள் (courtesy: tata twitter)

இன்ஜின் விவரங்கள்:

Altroz ​​உடன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் பஞ்ச் CNG ஆனது,  1.2 லிட்டர் மூன்று சிலிண்டர், NA பெட்ரோல் மோட்டார் மூலம் 86bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட CNG பயன்முறையில், இது 73.4bhp மற்றும் 103Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்கான 60 லிட்டர் எரிபொருள் டேங்க் இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க August New Cars: கார் பிரியர்களே, ஆகஸ்டில் வெளியாக உள்ள 5 புதிய கார்கள்.. உங்களுக்கான பட்டியல் இதோ..!

வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்:

காரின் வடிவமைப்பை பொறுத்தவரையில் பஞ்ச் சிஎன்ஜி வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களைக் காணவில்லை. அதேபோல், பஞ்ச் சிஎன்ஜியின் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம்,  காரில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பொருத்தவரை டாடா பன்ச் CNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆறு ஏர்பேக், டுவின் சிலிண்டர் CNG டேன்க், CNG மோடில் டைரக்ட் ஸ்டார்ட் வசதி, 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. தானியங்கி புரொஜெக்டர் முகப்பு விளக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் பெட்ரோலில் இயங்கும் பன்ச் வேரியண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget