மேலும் அறிய

ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?

BGauss புதிய OoWah MAX Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.23 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது. 3kWh LFP பேட்டரி, 145 கி.மீ. கிளெயிம்டு ரேஞ்ச், 60 kmph டாப் ஸ்பீடு உள்ளன.

BGauss OoWah MAX Plu Price, Range And Features: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு BGauss நல்ல செய்தி கூறியுள்ளது. இந்த நிறுவனம், புதிய OoWah MAX Plus ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.23 லட்சம். ஏற்கனவே உள்ள OoWah EX-ஐ விட இது உயர்நிலையிலுள்ளது.

நகரங்கள் & நகர்ப்புற பகுதிகளில் தினசரி பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்ததாக BGauss தெரிவித்துள்ளது. குறிப்பாக முதன்முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களை, இளைஞர்களை கருத்தில் கொண்டு இதை டிசைன் செய்ததாக தெரிவித்துள்ளது.

பெரிய பேட்டரி

OoWah MAX Plus-இல் முக்கிய மாற்றம் பேட்டரி. தற்போது உள்ள OoWah EX-இல் உள்ள பேட்டரியை விட 0.7kWh அதிக திறனுடன் 3kWh LFP பேட்டரியை இதில் வழங்கியுள்ளது. இந்த பேட்டரியை ஸ்கூட்டரிலிருந்து பிரித்து வீட்டுக்குள் கொண்டு சென்று சார்ஜ் செய்யலாம். 

ரேஞ்ச்

ARAI அங்கீகரித்த கிளெயிம்டு ரேஞ்ச் 145 கி.மீ.

ஸ்கூட்டரில் PMSM ஹப் மோட்டாரை தொடர்ந்துள்ளனர். இதன் பீக் பவர் 2.4kW ஆகவும், கண்டினியூஸ் பவர் 1.5kW ஆகவும் உள்ளது. பேட்டரி திறன் அதிகரித்தாலும் அதிகபட்ச வேகத்தில் மாற்றம் இல்லை. மணிக்கு 60 கி.மீ. டாப் ஸ்பீட்டை இது வழங்குகிறது.

பேட்டரி & மோட்டார் இரண்டிற்கும் IP67 ரேட்டிங் உள்ளது. பேட்டரி CAN டெக்னாலஜியுடன் செயல்படுகிறது. இதன் மூலம் பேட்டரி & வாகனம் இடையே தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறுவதாக நிறுவனம் கூறுகிறது.

750W சார்ஜர் இலவசம்

OoWah MAX Plus-உடன் 750W சார்ஜரை கூடுதல் விலை இல்லாமல்வழங்குகின்றனர். இந்த சார்ஜருடன் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3 மணி 30 நிமிடங்கள் ஆகும். முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் செய்ய 4 மணி 55 நிமிடங்கள் ஆகும்.

1,350W சார்ஜருடன் 100 சதவீத சார்ஜிங்கை 2 மணி 50 நிமிடங்களில் முடிக்கலாம் என்று நிறுவனம் ஸ்பெசிபிகேஷன் ஷீட்டில் குறிப்பிட்டுள்ளது. இந்த சார்ஜரின் விலை குறித்து தெளிவு இல்லை.

OoWah EX-உடன் ஒப்பிடும்போது இந்த புதிய ஸ்கூட்டரின் அளவுகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. சீட் உயரம் 765mm & கிரவுண்ட் கிளியரன்ஸ் 160mm. ஆனால் பெரிய பேட்டரி காரணமாக கெர்ப் வெயிட் 104 கிலோவாக உயர்ந்துள்ளது, OoWah EX எடை 97 கிலோ. சீட் கீழ் 21 லிட்டர் ஸ்டோரேஜ் இடம் உள்ளது.

புதிய அம்சங்கள்

ரிவர்ஸ் அசிஸ்ட், டிஸ்டன்ஸ் டு எம்ப்டி போன்ற புதிய அம்சங்களை இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் சேர்த்துள்ளனர். OoWah MAX Plus-இல் அனைத்து விளக்குகளும் LED. டிரம் பிரேக்குகள், CBS போன்ற அம்சங்கள் உள்ளன. லிம்ப் ஹோம் மோட் & USB சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

வாகனம் & சார்ஜர் மீது 3 ஆண்டுகள் அல்லது 36,000 கி.மீ. வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரியில் 3 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ. வாரண்டி உள்ளது. இந்த வாரண்டியை 5 ஆண்டுகள் அல்லது 75,000 கி.மீ. வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

விலை & கலர் ஆப்ஷன்கள்

BGauss OoWah MAX Plus விலை ரூ.1.23 லட்சம். இது எக்ஸ்-ஷோரூம் விலை. 

நிறங்கள்

எமரால்ட் ஷாடோ, ஜாமுன் பஞ்ச், டாங்கி டோமா & ஜெஸ்டி ரெட் நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

OoWah EX-மும் இப்போது சந்தையில் விற்பனையாகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,990. EX மாடலும் இதே நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ.2,499 இருந்தா போதும், புது யமஹா ஸ்கூட்டர் உங்க வீட்டில்! தீபாவளி ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க!
வெறும் ரூ.2,499 இருந்தா போதும், புது யமஹா ஸ்கூட்டர் உங்க வீட்டில்! தீபாவளி ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget