மேலும் அறிய

Tata Altroz: முதல்முறை - ஆல்ட்ரோஸ் காரை புதுசா கொடுத்த டாடா - என்னென்ன அம்சங்கள், கூடுதல் விலையா?

Tata Altroz facelift 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, ஆல்ட்ரோஸ் கார் மாடல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tata Altroz facelift 2025: டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆல்ட்ரோஸ் கார் மாடல், புதிய உட்புற அம்சங்களை கொண்டுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, ஆல்ட்ரோஸ் கார் மாடல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் எதிர்கொள்ளும், மிகப்பெரிய அப்டேட் இதுவாகும். ஆல்ட்ரோஸின் ஸ்டைலிங், உட்புற பகுதி மற்றும் அம்சங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பர்வ்ட்ரெயின் விருப்பங்கள் மட்டும் அப்படியே தொடர்கிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எடிஷனானத் ஸ்மார்ட், பியூர், கிரியேட்டிவ், அக்கம்ப்லீஸ்ட் S மற்றும் அக்கம்ப்லீஸ்ட்+S என 5 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற டிசைன்:

ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்டானது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட முன்பக்கத்தை கொண்டுள்ளது. இதில், மேம்படுத்தப்பட்ட பகல்நேரங்களில் ஒளிரக்கூடிய முற்றிலும் எல்இடி ஸ்ப்ளிட் ஹெட்லைட்கள்,  அடுக்கடுக்கான ரெக்டேங்குலர் எலிமெண்ட்களுடன் கூடிய புதிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவை அடங்கும்.  பக்கவாட்டை பொறுத்தவரை ஃப்ளஷ் ஃபிட்டிங் இலுமினேடட் டோர்கள் மற்றும் 16 இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பின்புறத்தில் புதிய ஆல்ட்ரோஸ் ஆனது T வடிவிலான ஹாரிஸாண்டல் எல்இடி டெயில் லேம்புகளை கொண்டுள்ளது. ஹுண்டாய் வென்யுவை போன்று எல்இடி லைட்பார்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்போர்டியரான டூயல் டோன் பின்புற பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த எடிஷனானது டியூன் க்ளோ, எம்பெர் க்ளோ, ப்ரிஷ்டின் ஒயிட், பியூர் கிரே மற்றும் ராயல் ப்ளூ ஆகிய 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அம்சங்கள்:

சுத்தமான டேஷ்போர்ட் மூலம் புதிய ஆல்ட்ரோஸ் ஆனது உட்புறத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் மற்றும் கர்வ் மாடல்கள் அடிப்படையில் இதன் உட்புறம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆட்டோ கார்பிளே உடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோ ஏசி கண்ட்ரோல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆல்ட்ரோஸர் ரேசர் வேரியண்டில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருந்த சில அம்சங்களும், புதிய ஆல்ட்ரோசில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், ஆம்பியண்ட் லைட்டிங், 90 டிகிரி ஓபனிங் டோர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ் & வைப்பர்ஸ், 360 டிகிரி கேமரா,6 ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் இந்த எடிஷனிலும் தொடர்கின்றனர்.

பவர்ட்ரெயின் விவரங்கள்:

பழைய ஆல்டோஸ் எடிஷனில் இருந்த பவர்ட்ரெயின் விருப்பங்கள் புதிய எடிஷனில் அப்படியே தொடர்கிறது. அதன்படி, 88hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 74hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வெர்ஷன் ஆனது, 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. 90hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. இந்தியாவிலேயே டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ள ஒரே ஹேட்ச்பேக் மாடல் ஆல்ட்ரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வண்டி லிட்டருக்கு சுமார் 24 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

புதிய ஆல்ட்ரோஸ் விலை விவரங்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஹுண்டாய் ஐ20, மாருதி சுசூகி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார் மாடல்களுக்கு ஆல்ட்ரோஸ் போட்டியாக உள்ளது. இதன் புதிய விலை தற்போது வரை அறிவிக்கப்படாவிட்டாலும், மேம்படுத்தல் காரணமாக பழைய எடிஷனை காட்டிலும் கூடுதலாகவே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.6.65 லட்சத்திலிருந்து ரூ.11.30 லட்சம் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget