மேலும் அறிய

Creta Rival: டர்போ பெட்ரோல் & ADAS உடன் க்ரேட்டாவை அடிக்க வருகிறது நிசானின் SUV - ஜுலை 9ம் தேதி லாஞ்ச்

Creta Rival Nissan Tekton: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டாவிற்கு போட்டியாக, நிசானின் டெக்டான் வரும் ஜுலை 9ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Creta Rival Nissan Tekton:  நிசானின் டெக்டான் எஸ்யுவியில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெற உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

க்ரேட்டாவிற்கு போட்டியாக வரும் நிசானின் டெக்டான்

ரெனால்ட் டஸ்டரின் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, நிசான் டெக்டானை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நடுத்தர அளவு எஸ்யூவி, 2026 ஜூலை 9 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கும் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. டெரானோ மற்றும் கிக்ஸ் மாடல்களுக்குப் பிறகு, மிகவும் போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இந்த பிராண்டின் மூன்றாவது முயற்சியாக டெக்டான் கொண்டுவரப்படுகிறது.  டஸ்டரிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, நிசான் பேட்ரோல் எஸ்யூவியிலிருந்து  பல வடிவமைப்பு அம்சங்களை பின்பற்றியுள்ளது.

நிசான் டெக்டான் - டிசைன் விவரங்கள்

டெக்டானின் முன்பக்கத் தோற்றம் ரெனால்ட் டஸ்டரிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இரண்டு க்ரோம் பட்டைகளுடன் கூடிய அகலமான க்ரில், கனெக்டட் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டூயல்-டோன் பம்பர் ஆகியவை வழங்கப்பட உள்ளன. செதுக்கப்பட்ட பானட்டில் 'TEKTON' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுத் தோற்றம் ரெனால்ட் டஸ்டரை மிகவும் ஒத்திருந்தாலும், இந்த புதிய நிசான் மிட்-சைச் எஸ்யூவி, தன்னைத் தனித்துக் காட்டுவதற்காகப் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை பயன்படுத்துகிறது.

பின்புறத்தில், இந்த எஸ்யூவி கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்கள், ஒரே வண்ணத்தில் அமைந்த டெயில்கேட் மற்றும் இரட்டை வண்ண பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அளவீடுகளை பொறுத்தவரை நிசான் டெக்டான், டஸ்டரைப் போலவே 4,343 மிமீ நீளம், 1,815 மிமீ அகலம் மற்றும் 1,659 – 1,701 மிமீ உயரம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீல்பேஸ் 2,657 மிமீ, க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 212 மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 518 லிட்டர் என மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நிசான் டெக்டான் - உட்புறம் மற்றும் அம்சங்கள்

புதிய நிசான் டெக்டான், புதிய கேபின் தீம், புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர், புதிய ட்ரிம்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பவர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS மற்றும் பல அம்சங்கள் ரெனால்ட் டஸ்டரில் இருந்து அப்படியே வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்: TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை துறை” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?

நிசான் டெக்டான் - பவர்ட்ரெயின்

புதிய நிசான் மிட்சைஸ் எஸ்யூவியில், ரெனால்ட் டஸ்டரில் இருந்து பெறப்பட்ட 1.0L டர்போ பெட்ரோல் (100bhp/160Nm) மற்றும் 1.3L டர்போ பெட்ரோல் (163bhp/280Nm) இன்ஜின்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்காலத்தில், உயர் ரக மாடல்கள் பிரத்தியேகமாக 1.8L பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வழங்கப்படலாம். உள்ளூர் சந்தையில் இந்த காரின் விலையானது 11 லட்சத்தில் தொடங்கி 19 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும். இதன் போட்டியாளரான க்ரேட்டாவானது ரூ.10.79 லட்சம் தொடங்கி ரூ.20.05 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Flex Fuel Cars: பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
WagonR Flex Fuel: புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
லேடீசை ராணுவ படையாக்கும் Vespa 150 ஸ்கூட்டர்! விலையும், மைலேஜும் எப்படி?
லேடீசை ராணுவ படையாக்கும் Vespa 150 ஸ்கூட்டர்! விலையும், மைலேஜும் எப்படி?
Upcoming SUVs 2026: SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தயவு செய்து உங்க ஆட்சியைப்பற்றி வரும் செய்தியை படிங்க- சிஎம் விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ்
தயவு செய்து உங்க ஆட்சியைப்பற்றி வரும் செய்தியை படிங்க- சிஎம் விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ்
TVK Vijay: காத்திருக்கும் Ex.அதிமுகவினர், கொதிப்பில் மக்கள் இயக்கம், அதிருப்தியில் மா.செ.,க்கள் - தவெக பதவிகள் யாருக்கு?
காத்திருக்கும் Ex.அதிமுகவினர், கொதிப்பில் மக்கள் இயக்கம், அதிருப்தியில் மா.செ.,க்கள் - தவெக பதவிகள் யாருக்கு?
MK Stalin: (அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
(அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
Tamilnadu Round Up: நாளை கூடுகிறது சட்டப்பேரவை, திமுக மீது குற்றச்சாட்டு, குறைந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை கூடுகிறது சட்டப்பேரவை, திமுக மீது குற்றச்சாட்டு, குறைந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Finance: உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
TN Weather Update: இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Upcoming Flex Fuel Cars: பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
Embed widget