மேலும் அறிய

TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?

Tamil Nadu Ministers 2026: விசிக மற்றும் IUML கட்சிகளுக்கு ஒதுக்கவே அதிதிராவிடர் மற்றும் சிறுபான்மை நல அமைச்சர் பதவிகளை யாருக்கும் ஒதுக்காமல், முதலமைச்சர் விஜய் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Nadu Ministers 2026: தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

அமைச்சரவையில் 2 இடங்கள்:

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தின்படி இன்று, காங்கிரசை சேர்ந்த 2 பேர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 பேர் என மொத்தம் 23 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 35 இடம்பெறலாம். அதன்படி, இதுவரை பொறுப்பேற்றுள்ள 33 அமைச்சர்கள் போக இன்னும் 2 பேர் அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம். அந்த இரண்டு இடங்களுமே விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்காக காத்திருப்பில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஆதி திராவிடர், சிறுபான்மை துறை” 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள 33 பேருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  ஆனால், ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மை நலன் போன்ற இலாகாக்கள் மட்டுமே இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக ஆதி திராவிடர் துறையையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்காக சிறுபான்மை நலன் துறையும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்ட மேலும் 2 கட்சிகள், தவெக உடன் கைகோர்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராகும் IUML எம்.எல்.ஏ.,

சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற முடிவு செய்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷாஜகான் என்பவரின் பெயர் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு சிறுபான்மை நலன் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

விசிக நிலைப்பாடு என்ன?

இரண்டு எம்.எல்.ஏக்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே, வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால் அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும் என தவெக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் திருமாவளவன் நடத்தி முடித்துள்ளார். விரைவில் அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அவருக்கு ஆதிதிராவிடர் நலன் இலாகா ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்

தவெகவின் இலக்கு

இந்திய யூனியன் முஸ்லீம் லீகை தொடர்ந்து விசிகவும் உரிய அறிவிப்பை வெளியிட்டதும், விரைவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்துள்ளது. அதிகாரத்தில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவளிப்பதன் மூலம், எந்த நேரத்திலும் ஆதரவை திரும்பப் பெற்று ஆட்சியை கவிழ்க்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் பங்கினை வழங்குவதன் மூலம் கூட்டணி கட்சியாக மாற்றி, வலுவான ம்ற்றும் நிலையான ஆட்சியை வழங்க முடியும். அதுபோக தனது தலைமையிலான ஆட்சியை மதச்சார்பற்ற ஒரு அரசாக முன்னிலைப்படுத்த, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு உதவும் எனவும் முதலமைச்சர் விஜய் நம்புகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
அமைச்சரவையில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க.! கிருஷ்ணசாமி அதிரடி- என்ன காரணம்.?
அமைச்சரவையில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க.! கிருஷ்ணசாமி அதிரடி- என்ன காரணம்.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
“உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
Motorcycle Reserve Fuel: ஒரு பைக் ரிசர்வ்-ல எவ்வளவு தூரம் பயணிக்கும்.? அதனால எஞ்சினுக்கு பிரச்னை வருமா.? தெரிஞ்சுக்கோங்க
ஒரு பைக் ரிசர்வ்-ல எவ்வளவு தூரம் பயணிக்கும்.? அதனால எஞ்சினுக்கு பிரச்னை வருமா.? தெரிஞ்சுக்கோங்க
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
அமைச்சரவையில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க.! கிருஷ்ணசாமி அதிரடி- என்ன காரணம்.?
அமைச்சரவையில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க.! கிருஷ்ணசாமி அதிரடி- என்ன காரணம்.?
Embed widget