கெட்டப்பை மாத்தி.. புத்தம் புது அப்டேட் வசதியுடன் அறிமுகமாகிறது புதிய Glanza - டொயோட்டோ போடும் ஸ்கெட்ச்
டொயோட்டோவின் மிகவும் புகழ்பெற்ற காரான Toyota Glanza கார் வரும் அக்டோபர் 14ம் தேதி அறிமுகமாகிறது.

டொயோட்டோ நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது Glanza.
புதிய Glanza:
ப்ரிமீயம் ஹேட்ச்பேக் காராக இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில், அப்டேட் செய்யப்பட்ட புதிய Glanza காரை டொயோட்டோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய Toyota Glanza கார் வரும் அக்டோபர் 14ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய Toyota Glanza கார் பார்ப்பதற்கு மாருதியின் புதிய பலேனா காரின் தோற்றத்தில் உள்ளது. வெளிப்புறத் தோற்றம் மற்றும் வடிவங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
இந்த புதிய Toyota Glanza காரில் 16 இன்ச் அலாய் சக்கரங்கள், க்ரோம் விண்டோ சர்ரவுண்ட், க்ரோம் டோர் ஹேண்ட்ல் கார்னிஷ் வசதிகள் உள்ளது. எல்இடி டெய்ல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த K12N 1.2-litre 4 சிலிண்டர் என்ஜினுக்கு பதிலாக புதிய Z12E 1.2-litre 3 நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. பழைய எஞ்ஜின் 89 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் இழுதிறன் பெட்ரோல் எஞ்ஜினில் கொண்டது. சிஎன்ஜி வேரியண்டில் 76 எச்பி மற்றும் 98.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
மைலேஜ்:
தற்போது புதியதாக பொருத்தப்பட்டுள்ள Z12E எஞ்ஜினில் 82 எச்பி மற்றும் 112.4 என்எம் டார்க் இழுதிறன் பெட்ரோலில் கொண்டது. சிஎன்ஜி வேரியண்டில் 69 எச்பி மற்றும் 101.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அக்டோபர் 14ம் தேதி அறிமுகமாக உள்ள 23.80 கிலோமீட்டர் மைலேஜ் மேனுவல் வேரியண்டில் அளிக்கிறது. ஆட்டோமெட்டிக் வேரியண்டில் 24.77 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. கடந்த வேரியண்டைக் காட்டிலும் 2 கிலோமீட்டர் அதிகமாகவே மைலேஜ் அளிக்கிறது. சிஎன்ஜி வேரியண்டில் 33.61 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
விலை எப்படி?
தற்போது கிளான்சா கார் ரூபாய் 8.06 லட்சம் முதல் ரூபாய் 11.90 லட்சம் வரை விலை ஆகும். புதிய கார் இதே விலையில் விற்கப்படுமா? அல்லது விலை மிகவும் அதிகளவிற்கு விற்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே விற்பனையாகி வரும் கிளான்சா காரில் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிலிட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங், பின்பக்க ஏசி வென்டிலேட்டர், யுஎஸ்பி போர்ட் வசதிகள் உள்ளது. 7 அல்லது 9 இன்ச் ஸ்மார்ட் ப்ளேகாஸ்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி உள்ளது.
முகப்பு விளக்குகள், எல்இடி முகப்பு பனி விளக்குகள், யுவி ப்ரொடக்ஷன்ஸ் கிளாஸ் வசதிகள் உள்ளது. 318 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. ஏற்கனவே உள்ள காரில் 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி, ப்ரேக் அசிஸ்ட் வசதிகள் உள்ளது. வெகிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் டோர்லாக் வசதி உள்ளது. புதியதாக அறிமுகமாக உள்ள காரில் இதே வசதிகள் இருக்குமா? அல்லது இதைவிட கூடுதல் சிறப்புகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















