Grand Vitara 7 Seater: மஹிந்திராவிற்கு ஆப்பு? 7 சீட்டர் கிராண்ட் விட்டாரவை களமிறக்கும் மாருதி - இவ்ளோ அம்சங்களா..!
New Grand Vitara 7 Seater: மாருதி சுசூகி நிறுவனம் 7 சீட்டர் கிராண்ட் விட்டாராவை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Grand Vitara 7 Seater: மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் கிராண்ட் விட்டாரா, இந்திய சந்தையில் மஹிந்திரா XUV700 கார் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
கிராண்ட் விட்டாரா 7 சீட்டர்:
நாட்டின் மிக்கபெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, நடப்பாண்டில் இரண்டு எச்யுவி வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் ஒன்று அந்நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமானாகும். மற்றொன்று,கிராண்ட் விட்டாராவின் 7 சீட்டர் எஸ்யுவி எடிஷனாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் போது, கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ கார் மாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இது நிரப்பும் என கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் எஸ்யுவி வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாருதி நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு இது நல்ல தேர்வாக இருக்கலாம்.
வடிவமைப்பு விவரங்கள்:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, 7 சீட்டர் கிராண்ட் விட்டாராவின் வடிவமைப்பானது மாருதியின் வழக்கமான டிசைன் லேங்குவேஜை பயன்படுத்தும். கூடுதல் இருக்கைகள் இணைக்கப்படுவதால் தற்போதுள்ள கிராண்ட் விட்டாராவை விட, புதிய மாடல் சற்று கூடுதல் நீளமாக இருக்கும் என கூறப்படுகிறது. கார் பின்புற முனைக்கு ஒரு புதிய வடிவமைப்பையும், முற்றிலும் புதிய முன்பக்கத்தையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிரது. இருப்பினும், சில்-அவுட் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ரே தொடரலாம், ஆனால் அலாய் வீல்கள் புதிய வடிவமைப்பை பெறலாம். 5-சீட்டர் எடிஷனில் உள்ள மேலே நிலைநிறுத்தப்பட்ட DRLகள் மற்றும் கீழே ஹெட்லைட்கள் கொண்ட ஸ்பிலிட் ஹெட்லைட்டுக்கு மாறாக, 7-சீட்டர் உள்ளமைக்கப்பட்ட LED DRLகளுடன் பாரம்பரியமான ஹெட்லைட்களைக் கொண்டிருக்கலாம்.
அம்சங்கள் மீதான எதிர்பார்ப்பு:
7 சீட்டர் SUV எடிஷனானது நீட்டிக்கப்பட்ட அம்சங்களை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, லெவல்-2 ADAS அம்சங்களின் தொகுப்பை பெற்று, இதனை பெறும் மாருதி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை பெறலாம். ஏனெனில் கீழ் கிரில் முன் பார்க்கிங் சென்சார்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம். இதுபோகம், 9 இன்ச் அல்லது அதற்கும் மேற்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் பெறலாம்.
இன்ஜின் விவரங்கள்:
பவர்டிரெய்னைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இன்றி, அதாவது தற்போது விற்பனையில் உள்ள 5 சீட்டர் எடிஷனில் இருப்பதை போன்றே தொடரும் என கூறப்படுகிறது. அதன்படி, FWD மற்றும் AWD உடன் 1.5-லிட்டர் NA பெட்ரோல் கொண்டிருக்கும். ஐந்து-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஆறு-ஸ்பீட் டார்க் மாற்றி உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் விற்பனைக்கு வரலாம். CVT உடன் வேலை செய்யும் 1.5-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கும். நிறுவன குறிப்புகளின்படி அவற்றின் மைலேஜ் விவரங்கள் ,
- பெட்ரோல் MT: சுமார் 18-20 கிமீ/லி
- பெட்ரோல் AT: லிட்டருக்கு சுமார் 17-19 கி.மீ.
- ஹைப்ரிட் eCVT: 25-28 kmpl மைலேஜ்
விலை விவரங்கள்:
மாருதி கிராண்ட் விட்டாரா 5 சீட்டர் எடிஷனானது தற்போது 32 வேரியண்ட்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்கி, அதிகபட்சமாக 20 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாகனத்தின் நீளம், இருக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறுவதால் 7 சீட்டர் எடிஷனின் விலை கணிசமாக உயரலாம் என கூறப்படுகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது, 7 சீட்டர் எடிஷன் பிரிவில் உள்ள ஹூண்டாய் அல்கசார், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற கார்களுக்கு கடும் போட்டியாளராக மாறக்கூடும் என கருதப்படுகிறது.
அறிமுகம் எப்போது?
கிராண்ட் விட்டாராவின் 7 சீட்டர் எடிஷனானது கடந்த ஆட்டோ எக்ஸ்போ முடிந்த பிறகு, கடந்த மார்ச் மாதமே வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் உற்பத்தியில் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக திட்டமிட்டபடி கார் வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் 7 சீட்டர் கிராண்ட் விட்டார இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, முன்பதிவையும் மாருதி நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















