மேலும் அறிய

Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ

Brezza Turbo Petrol Review in Tamil: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா டர்போ பெட்ரோல்: எப்படி இருக்கிறது புதிய கார்? - முழு டிரைவிங் ரிவ்யூ

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய அப்டேட்டில் மிகப்பெரிய சிறப்பம்சமாக டர்போ பெட்ரோல் இன்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபிராங்க்ஸ் மாடலுக்குப் பிறகு டர்போ இன்ஜின் பெறும் இரண்டாவது மாருதி கார் இதுவாகும்.

ஏற்கனவே விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் நார்மல் இன்ஜினுடன், இப்போது இந்த 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் ஆப்ஷனும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.

அதிகபட்ச பவர், டார்க் திறன்

இந்த 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் அதிகபட்சமாக 110 bhp பவரையும், 170 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 1.5 லிட்டர் இன்ஜினை விட அதிக சக்தி வாய்ந்தது. மேலும், மாருதி நிறுவனத்திலேயே முதன்முறையாக இந்த காரில் புதிய 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கியர் மாற்றும் இடைவெளி சற்றே நீளமாக இருந்தாலும் மிகத் துல்லியமாக விழுகிறது.

Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ

காரை ஸ்டார்ட் செய்தால் இன்ஜின் சத்தம் மிகக் குறைவாகவும், மென்மையாகவும் உள்ளது. பவர் டெலிவரி சீராகவும் வலிமையாகவும் இருக்கிறது. கிளட்ச் மிகவும் லேசாக உள்ளது.

கியர் மாற்ற வேண்டிய அவசியமில்லை

குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக டார்க் கிடைப்பதால், நெரிசலான டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்றத் தேவையில்லை. பெரும்பாலும் 3ஆவது கியரிலேயே நகரப் பயணங்களை மேற்கொள்ளலாம். இது நகரப் போக்குவரத்தில் ஓட்டுவதை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது.

சிட்டிக்குள்ளும் நெடுஞ்சாலைகளிலும்..

ஸ்டீயரிங் மென்மையாக இருப்பதாலும், காம்பேக்ட் அளவு மற்றும் சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதாலும் சிட்டிக்குள் ஓட்டுவதற்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் 6-வது கியர் பயன்பாடு சிறப்பான பயணத்திற்கு உதவுகிறது. குறைந்த வேகத்திலும் குலுங்கல்கள் இல்லாத பயணத்தை உறுதி செய்கிறது.

மைலேஜ் எப்படி?

மைலேஜைப் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வமாக ஒரு லிட்டருக்கு 20.47 கி.மீ என சான்றளிக்கப்பட்டுள்ளது. எனினும், நிஜப் பயன்பாட்டில் 12 முதல் 14 கி.மீ மைலேஜ் கிடைக்கும். காரின் வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றம் ஏதுமில்லை; மக்கள் வரவேற்ற பழைய டிசைன் அப்படியே தொடர்கிறது.

Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ

நிறை என்ன?

பார்க்கிங் செய்ய உதவும் தரமான புதிய 360 டிகிரி கேமரா மற்றும் சில அடாஸ் அம்சங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. வெயிலுக்கு இதமளிக்கும் வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளன. இதில் ஸ்டெப்னி கிடையாது; அதற்குப் பதிலாக பஞ்சர் ரிப்பேர் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மைலேஜ் சற்றே அதிகமாக கிடைக்கக்கூடும்.  

என்ன குறை?

டிரைவிங் பிரியராக இருந்து, அதிக பவர் எதிர்பார்ப்பவர்களுக்கு பிரெஸ்ஸா டர்போ பெட்ரோல் மாடல் சிறந்த தேர்வாகும். ஆனால், இதில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை. ஆட்டோமேட்டிக் விரும்புபவர்கள் பழைய 1.5L மாடலைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பவர் மற்றும் பெர்ஃபார்மன்ஸை விரும்புபவர்களுக்கு, இந்த புதிய டர்போ மாடல் நிச்சயம் ஒரு தகுதியான தேர்வாக இருக்கும் என்பதே ABP வழங்கும் பரிந்துரை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?

Embed widget