மேலும் அறிய

Top 5 Powerful Bikes: ரூ.3 லட்சம் பட்ஜெட் - இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்கள்

Top 5 Powerful Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.3 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும், அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Top 5 Powerful Bikes: ரூ.3 லட்சம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும், டாப் 5 மோட்டார்சைக்கிள்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்கள்:

கேடிஎம் 390 டியூக் மற்றும் ராயல் என்ஃபீல்டு 650 இரட்டையர்கள், இந்தியாவில் அதிக சக்தி வாய்ந்த மோட்டர் சைக்கிள்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. ஆனால், அவற்றின் விலை உங்களது பட்ஜெட்டில் அடங்காமல் இருக்கலாம். ஆனால், கவலை வேண்டாம்.  3 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக சக்தி வாய்ந்த, செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்கள் அடங்கிய டாப் லிஸ்ட் உங்களுக்காக கீழே வழங்கப்பட்டுள்ளது.

5. Honda CB300R 31hp:

இந்திய சந்தையில் CB300R எப்போதுமே குறைவாக மதிப்பிடப்பட்ட பைக்காகவே இருந்து வருகிறது.  ஆனால் அதன் திருத்தப்பட்ட விலையான ரூ.2.40 லட்சத்துடன், முன்பை விட இப்போது அதன் போட்டியாளர்களுக்கு CB300R கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 146 கிலோ கர்ப் எடை (KTM 125 டியூக்கை விடவும் இலகுவானது!) கொண்டுள்ள இந்த வாகனத்தில், 286cc, single-cylinder, liquid-cooled DOHC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

4. TVS Apache RTR 310 35.6hp:

312சிசி மோட்டாரை கொண்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஆனது, அப்பாச்சியின் மிக சக்திவாய்ந்த வாகனமாக உள்ளது. இது 35.6எச்பி ஆற்றலை உருவாக்குகிறது. மிகப்பெரிய Apache ஆனது அதன் அடிப்படை தோற்றத்தில் கூட மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த பைக் ஆக உள்ளது.  இதன் விலை ரூ.2.43 லட்சம். என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3. Triumph Scrambler 400 X 40hp:

பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டாண்மையில் இருந்து வெளிவரும் இரண்டாவது தயாரிப்பு ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார்சைக்கிள். ஸ்பீடு 400  உயரமான, அதிக விசாலமான மற்றும் லேசான ஆஃப்-ரோடிங்கை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டது. அதேநேரம், ரூ. 2.63 லட்சம் மதிப்பில் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் அற்புதமான மதிப்புகளை பெற்றுள்ளது. இதில், 398.15 cc air-cooled engine வழங்கப்பட்டுள்ளது.

2. KTM 390 Adventure X 43.5hp:

ரூ.2.80 லட்சத்தில் 390 அட்வென்ச்சர் எக்ஸ்,  கேடிஎம்-ன் முழு 390 லைன்-அப்பில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மாடலாகும். இது இன்னும் பழைய 373சிசி இன்ஜினையே பயன்படுத்துகிறது. இது 43.5hp மற்றும் 37Nm டார்க்கை உருவாக்குகிறது. எந்த எலக்ட்ரானிக் ரைடர் உபகரணங்களும் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற 390களில் காணப்படும் ஃபேன்சியர் TFT யூனிட்களுக்குப் பதிலாக ஒரு எளிய LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ. 3 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் அதிகபட்ச சக்தி மற்றும் திறன் வாய்ந்த பைக்கை வாங்க விரும்பினால், 390 அட்வென்ச்சர் எக்ஸ் சரியான தேர்வாக இருக்கும்.

1. Husqvarna Svartpilen 401 46hp:

புதிய ஜென்-2 ஹஸ்க்வர்னா மாடல்கள் மூலம் , முந்தைய பைக்குகளில் இருந்த தனித்துவமான பிரச்சனைகளை பஜாஜ் தீர்த்து வைத்துள்ளது. ரூ. 2.92 லட்சத்தில் கிடைக்கும்,  Svartpilen 401 ஆனது சில மின்னணு அம்சங்கள் இல்லாமல் மிகவும் நுட்பமான மற்றும் கம்பீரமான 390 டியூக் மாடலை சார்ந்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget