Top 5 EV Companies: டெஸ்லா தெரியும்..! ஆனா, அதுக்கே டஃப் கொடுக்கும் மற்ற 5 மின்சார கார் உற்பத்தியாளர்களை தெரியுமா?
Top 5 EV Companies: மின்சார கார் உற்பத்தியில் டெஸ்லா வரிசையில் மிக முக்கிய பங்கு வகிக்கும், மற்ற நிறுவனங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Top 5 EV Companies: டெஸ்லாவை தவிர்த்து மின்சார கார் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும், டாப் 5 நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டெஸ்லா மின்சார கார்:
டெஸ்லா இப்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மின்சார உற்பத்தி நிறுவனம் ஆகும். பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அடிப்படையில், அந்த பிராண்டின் கார்கள் சிறந்து விளங்குகின்றன. இந்த கார்கள் EV செக்மெண்டில் மிகவும் விரும்பத்தக்கவை மற்றும் எலோன் மஸ்க் தனது படைப்புகளைப் பின்பற்றுவதற்கான ஒரும் பெரும் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் டெஸ்லா மட்டும் EV துறையில் முன்னேற்றம் காணவில்லை. அதனை போன்றே மின்சார கார் உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் மற்ற 5 நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
லூசிட் மோட்டார்ஸ்
லூசிட் மோட்டார்ஸ் டெஸ்லாவின் முக்கிய போட்டி நிறுவனமாகும். அவர்கள் தங்களது லூசிட் ஏர் செடான் மூலம் டெஸ்லா மாடல் எஸ்-க்கு கடும் போட்டியாளராக திகழ்கின்றனர். இது ஒரு அமெரிக்க பிராண்டாகும். இந்நிறுவனம் ஆடம்பர மின்சார வாகனங்களை உருவாக்குகிறார்கள். அவை சிறந்த செயல்திறனையும் வழங்குகின்றன. லூசி மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும், ஒரு நல்ல ஆதரவு மற்றும் பார்வையுடன் மிகவும் போட்டித்தன்மையுடன் தொடர்கிறது.
ரிவியன் ஆட்டோமோட்டிவ்
ரிவியன் ஆட்டோமோட்டிவ் கவர்ச்சிகரமான மின்சார கார்களை உருவாக்குகிறது. அதோடு செயல்திறன், நடைமுறை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டெஸ்லாவிற்கு மிகவும் நெருக்கமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கார்கள் மிகவும் தனித்துவமானவை மற்றும் EV என்று அநாவசிய வெளிப்பாடுகளை கொண்டிருக்காமல் EVயின் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
லி ஆட்டோ
லி ஆட்டோ ஒரு புதிய நிறுவனம். இது 2015 இல் நிறுவப்பட்டு, தற்போது அனைத்து வகையான மின்சார கார்களையும் உருவாக்குகிறது. சீன சந்தையில் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அவை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆண்டிற்கு சில ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்த நிறுவனம், குறுகிய காலத்திலேயே ஆண்டிற்கு லட்சம் வாகனங்களை விற்பனை செய்யும் நிலையை எட்டியுள்ளது.
XPENG
XPENG மற்றொரு சீன உற்பத்தி நிறுவனமாகும். இது சீன சந்தையில் மற்றொரு பெரிய வாகன உற்பத்தியாளரான GAC குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகளால் வழிநடத்தப்படுகிறது. தன்னாட்சி ஓட்டுநர் துறை மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் முன்னேறி வருகிறது.
ஃபிஸ்கர்:
ஃபிஸ்கர் ஒரு நன்கு அறியப்பட்ட அமெரிக்க எலக்ட்ரிக் கார் பிராண்ட் ஆகும். இதற்கு ஃபிஸ்கர் கர்மாவுக்குப் பொறுப்பான ஹென்ரிக் ஃபிஸ்கர் இந்நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் BMW மற்றும் ஆஸ்டன் மேட்டின்கள் உட்பட இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த கார்களை இவர் வடிவமைத்துள்ளார். ஃபிஸ்கர், டெஸ்லாவிற்கு எதிராக அதன் நிலைப்பாட்டில் மிகவும் வலுவாக இருந்தாலும், அதன் வாகனங்களின் உற்பத்தி மற்றும் தரத்தில் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.