Popular Porsche: சொகுசுக்கு பேர் போன போர்ஷே - இந்தியாவில் பிரபலமான 5 கார் மாடல்களின் லிஸ்ட்..!
Popular Porsche: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமான, போர்ஷே நிறுவனத்தின் 5 சொகுசு கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Popular Porsche: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமான, போர்ஷே நிறுவனத்தின் டாப் 5 சொகுசு கார்களின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
போர்ஷே கேய்னே:
Porsche Cayenne உலகின் மிகவும் பிரபலமான Porsche மாடல்களில் ஒன்றாகும். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கார் பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது இந்தியாவில் பல பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. GTS வேரியண்டில் 3.0L V6 மற்றும் 4.0L பை-டர்போ V8 இன்ஜின் உள்ளது. Cayenne போதுமான இடவசதியை கொண்டுள்ளது மற்றும் ஸ்போர்ட்டி பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இந்த காரின் விலை சென்னையில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
போர்ஷே 911:
போர்ஷே 911 இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் பழம்பெரும் மற்றும் ஐகானிக் மாடல்களில் ஒன்றாகும். அதன் வடிவம் மிகவும் அடையாளமாக உள்ளது இந்த மாடலின் அறிமுகத்தின் முதலே அப்படியே உள்ளது. 911 சிறந்த ஓட்டுநர் கார்களில் ஒன்றாகும். அனைத்து கார் பிரியர்களாலும் இது விரும்பப்படுகிறது. இந்த காரின் விலை சென்னையில் 2.34 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 கோடியே 33 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போர்ஸ் பாக்ஸ்டர்
Porsche Boxter என்பது தொழில்நுட்ப ரீதியாக போர்ஷை நிறுவனத்தை, திவால் நிலையிலிருந்து காப்பாற்றிய கார் மாடலாகும். பாக்ஸ்டர், ஓப்பன் டாப் மோட்டாரிங்கின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது. அதே சமயம் அந்த வாகனைத்தை ஓட்டுவதையும் மேலும் வேடிக்கையாக மாற்றுகிறது. பாக்ஸ்டர் ஒரு சிறந்த வேகமான ஸ்போர்ட்ஸ் கார் மாடலாகும். இதன் விலை சென்னையில் ஒரு கோடியே 91 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போர்ஷே மேகன்:
Porsche Macan குழந்தை SUV அனைவராலும் மிகவும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த ஜெர்மன் சொகுசு பிராண்டிலிருந்து வாங்குவதற்கு மிகவும் மலிவான கார்களில் இதுவும் ஒன்றாகும். இது பல பெட்ரோல் இன்ஜின் விருப்பங்கள் மற்றும் மின்சார எடிஷனையும் பெறுகிறது. இந்த மாடலின் விலை சென்னையில் 88 லட்சத்தில் இருந்து தொடங்கி, அதிகபட்சமாக ஒரு கோடியே 53 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போர்ஸ் கேமன்:
போர்ஸ் கேமன் மற்றொரு சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இது பாக்ஸ்டருக்குப் பிறகு போர்ஷேயின் வரிசையில் இரண்டாவது மிட் எஞ்சின் ஸ்போர்ட்ஸ் கார் ஆக உள்ளது. அடிப்படையில் பாக்ஸ்டரின் ஹார்ட் டாப் எடிஷன் மற்றும் GT4 RS இல் வைக்கப்பட்டுள்ள GT3 பெறப்பட்ட பிளாட்-சிக்ஸ் இன்ஜின் உட்பட பல இன்ஜின் விருப்பங்களை கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் விலை 75 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கி, 2 கோடியே 74 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.