மேலும் அறிய

Kia Hybrid: லோ காஸ்டில் ஹைப்ரிட் கார், ஹுண்டாயின் தம்பி போடும் திட்டம் - எந்த SUV தெரியுமா? எப்படி இருக்கும்?

Kia Affordable Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான மலிவு விலை ஹைப்ரிட் எஸ்யுவி கார் மாடல் தயாரிப்பில் கியா நிறுவனம் தீவிவரமாக களமிறங்கியுள்ளதாம்.

Kia Affordable Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான கியாவின் மலிவு விலை ஹைப்ரிட் எஸ்யுவி 2028 அல்லது 2029ம் ஆண்டில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

புதிய தலைமுறை கியா சோனெட் ரெடி..

இந்திய சந்தைக்கான இரண்டாவது தலைமுறை சோனெட் கார் மாடலானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. QY2E என்ற கோட்நேமை கொண்டுள்ள இந்த காரனது தற்போது தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. புதிய கியா சோனெட்டானது வெளிப்புறத்தில் மட்டும் இன்றி உட்புறத்தில் பல்வேறு அப்டேட்களையும் பெறக்கூடுமாம். குறிப்பாக மெக்கானிக்கல் அடிப்படையிலும் சில குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாம். அண்மையில் சாலை சோதனையின் போது அடையாளம் காணப்பட்ட இந்த காரானது, முற்றிலுமாக மறைக்கப்பட்டு டிசைன் விவரங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் முன்புற க்ரில், ரேக்ட் விண்ட்ஷீல்ட் மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க அம்சங்களை பார்க்க முடிந்தது.

புதிய ப்ளாட்ஃபார்ம் & கூடுதல் கேபின் வசதி

காரின் மிகப் பெரிய அப்க்ரேடாக சமீபத்திய எலெக்ட்ரிகல் மற்றும் அலெக்ட்ரானிக்ஸ் (E&E) ஆர்கிடெக்ட்சரை ஆதரிக்கும் கியாவின் புதிய K1 ப்ளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், OTA எனப்படும் ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் மற்றும் ரிமோட் டையாக்னாஸ்டிக்ஸ் போன்ற வசதிகள் செயல்படுத்தப்படுகிறது. கியா சைரோஸ் மாடலுக்கும் அடிப்படையாக விளங்கும் K1 ப்ளாட்ஃபார்ம், சோனெட்டின் தற்போதைய K2 கட்டமைப்பை விட 20 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. இதனால் தற்போதைய மாடலில் உள்ள குறைந்த பின்புற இருக்கை இடவச திதொடர்பான பிரச்னையை சரிசெய்ய கியா முயல்கிறது. இதன் விளைவாக, புதிய கியா சோனெட், பின்புற இருக்கையில் அமர்பவர்களுக்கு மேம்பட்ட கேபின் இடவசதியையும் சவுகரியத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனெட்டில் புதிய கூடுதல் அம்சங்கள்:

அம்சங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், 2027 கியா சோனெட், ஒரு புதிய முழு டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளேவுடன், பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலைக்கு ஏற்ற மதிப்பை மேம்படுத்தும் நோக்கில், கார் தயாரிப்பு நிறுவனம் லெவல் 2 ADAS வசதியை அறிமுகப்படுத்தக்கூடும். இதுபோக புதிய கேபின் தீம், புதிய ட்ரிம்கள், அப்ஹோல்ஸ்டரி மற்றும் உட்புறம் என மேம்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் ஆகியவையும் மாற்றங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனெட்டின் பவட்ரெயின் விருப்பங்கள்

புதிய கியா சோனெட் 2027 மாடலில், தற்போதுள்ள 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (83PS/115Nm), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (120PS/172Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (120PS/172Nm) இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் iMT, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகிய ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் மாற்றமின்றி அப்படியே தொடரக்கூடும்.

இதையும் படியுங்கள்: Toyota Innova Crysta: அப்க்ரேடாகி 4 புதிய வேரியண்ட்களில் இன்னோவா க்ரிஸ்டா.. 7 & 8 சீட்டர் - விலை, அம்சங்கள் என்ன?

கியா சோனெட் ஹைப்ரிட்

கியாவின் தாய் நிறுவனமான ஹுண்டாயும் இந்திய ஹைப்ரிட் பிரிவில் தனது பயணத்தை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புதிய செல்டோஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்வதன் மூலம் ஹைப்ரிட் வாகனப் பிரிவில் நுழைய கியாவும் தயாராகி வருகிறது. அதன்படி, தனது வரவிருக்கும் ஹைப்ரிட் மாடல்களுக்காக, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மின்மயமாக்க வாய்ப்புள்ளது. அடுத்த தலைமுறை கியா சோனெட் காரும் இதே ஹைப்ரிட் பவர்ட்ரெய்னுடன், அநேகமாக 2028 அல்லது 2029-ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், சோனெட் இந்தியாவில் கியாவின் மிகவும் மலிவு விலை ஹைப்ரிட் காராக மாறும். அம்சங்கள் மற்றும் வசதிகள் அடிப்படையில் வழக்கமான இன்ஜின் எடிஷனை அப்படியே ஹைப்ரிட் எடிஷன் பின் தொடரும் என கூறப்படுகிறது.

கியா சோனேட் ஹைப்ரிட்டின் விலை

சோனெட் ஹைப்ரிட் எடிஷன் உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும்போது, தொடக்க விலை சுமார் 10 லட்சம் வரம்பில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மஹிந்த்ராவின் XUV 3XO, மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ், டாடா நெக்ஸான், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசானின் C-SUV ஆகியவற்றின் ஹைப்ரிட் எடிஷன்களுடன் போட்டியிட உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget